விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அதிகளவில் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இது வரையில் சீசன் 7 வரை நடைபெற்றது. சீசன் 7 வரை கமலஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியை தற்போது விஜய் சேதுபதி தொகுத்து விளங்குகிறார். பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பித்த நிலையில் தினமும் என்ன என்ன டாஸ்க் இருக்கும் என்பதை பார்பதற்கே மக்கள் விறுவிறுப்பாக இருப்பார்கள். இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் வாரத்தின் இறுதியில் கமலஹாசன் போட்டியாளர்களை அவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டுவது போல தற்போது விஜய் சேதுபதியும் வாரத்தின் இறுதியில் போட்டியாளர்களின் தவறுகளை குறித்து கேள்வி எழுப்பி வருகிறார்.
அவருடைய பணியை அவர் பிரமாதமாக செய்துவருகிறார். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுஉள்ளார். இந்நிலையில் ரசிகர்கள் எதிர்பார்த்ததை விட விஜய் சேதுபதி அதிரடி ஆக்க்ஷன் ஆக உள்ளார் இது ரசிகர்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றிருந்தாலும் இந்த அளவுக்கு போட்டியாளர்களிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டியது இல்லை என்று தகவலும் பரவ ஆரம்பித்து உள்ளது. தற்போது நிகழ்ச்சி மிகவும் சுவாரசியமாக இல்லாததால் மீண்டும் கமலஹாசன் வர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றன்ர்.
இந்நிலையில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் விஜய்சேதுபதியை தாக்கி பேசி ஒரு பதிவிட்டுள்ளார். அதில் கமலகாசனிடம் பணிவு இருந்தது எனவும் மேலும் அவருக்கு அனுபவம், முதிர்ச்சி, ஞானம், சமூகம் வளர்ச்சி, போன்ற செயல்பாடுகள் இருந்ததாகவும் அவர் யார் மனதையும் புண்படுத்தாமல் பேசுவார் எனவும் கூறியிருந்தார். மேலும் விஜய் சேதுபதி குறித்துகுற்றம் செய்த ஆண்களை விசாரிக்காமல் பெண்களை தாக்குவது சரி அல்ல எனவும் மேலும் போட்டியாளர்களும் உங்களை என்னை போல மனிதர்கள் தானே எனவும் வேண்டா வெறுப்போடு நிகழ்ச்சி நடத்துவது சரி அல்ல. பணத்துக்காக நிகழ்ச்சி நடத்துபவர் கண்ணியம், கட்டுப்பாடோடு நடத்த வேண்டும் என்று விஜய் சேதுபதியை கடுமையாக தாக்கி பேசியுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.