தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஜெயம் ரவி இவருக்கும் அவரது மனைவிக்கும் திருமணம் ஆகி 15 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருபெரும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்த நிலையில் திடீர்யென இருபெருக்கும் இடையில் கருத்து வேறுப்பாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெயம் ரவியும் அவரது மனைவி ஆர்த்தியும் சேர்ந்து பேசி பரஸ்பரமாக பிரிந்துவிடலாம் என்று முடிவெடுத்துள்ளனர். இதற்கான அறிவிப்பை ஜெயம் ரவி அறிவித்திருந்தார்.
ஆனால் மனைவி ஆர்த்தியோ என்னுடைய விருப்பம் இல்லாமல் ஜெயம் ரவி விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என ஆர்த்தி ரவி மீது குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருந்த ஆர்த்தி ஜெயம் ரவி பிரிவதற்கு ஆர்த்தி ஜெயம் ரவி மீது கொண்ட சந்தேகமே காரணம் என தகவல்கள் வெளியாகின. ஜெயம் ரவி கோவாவை சேர்ந்த பாடகி ஹென்ஷாவுடன் நெருக்கமாக இருப்பதே காரணமாக இருக்குமோ என்று தகவல் வெளிவந்த நிலையில் அதற்க்கு மறுப்பு தெரிவித்து உள்ளார் ஜெயம் ரவி. .
இந்நிலையில் இருவருக்கும் இடையிலான விவாகரத்து குறித்து சமரச தீர்வு மூலமாக பேச்சுவார்தை நடத்த குடும்ப நல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதற்காக நடிகர் ஜெயம்ரவி மாற்று ஆர்த்தி இருவரும் இரு தினங்களுக்கு முன்பு நேரில் ஆஜர் ஆகினர். பின்னர் ஜெயம் ரவி, ஆர்த்தி சமரச பேச்சு வார்த்தை டிசம்பர் 7 ம் தேதிக்கு ஒத்திவைப்பு உத்தரவு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது என்பது தெரியவந்தது.