Site icon

புது சீரியலில் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிகா….. எந்த channel தெரியுமா..?

தற்போதைய காலங்களில் மக்கள் மத்தியில் பெரிய இடம் பிடித்துள்ளது என்றால் அது சீரியல் தான். இதனால் ஒவ்வொரு சேன்னலுமே பலவிதமான கதைகளுடன் புது புது சீரியல் கொண்டு வருகிறது.


இருப்பினும் டிஆர்பி-யில் எப்போதும் போட்டி போட்டு கொண்டிருக்கும் சேனல் என்றால் அது ஜீ தமிழ், விஜய் டிவி, சன் டிவி தான். இந்த மூன்று சேனலும் சீரியல் மட்டுமின்றி பல ரியாலிட்டி ஷோவ்வும் நடத்தி வருகின்றது.


இதற்க்கிடையில், சன் மற்றும் விஜய் டிவி-யின் தொடர்கள் பல முடிந்து புதிது வர போகிறது என தகவல் வெளியாகியது. இதனைத் தொடர்ந்து ஜீ தமிழில் வெளியாக இருக்கும் “மௌனம் பேசியதே” தொடர் பற்றி தான் இணையத்தில் பரவி வருகிறது.
இத்தொடரை “கண்ணத்தில் முத்தமிட்டால்” தொடரை தயாரித்த மகிழ் நிறுவனமே தயார் செய்கிறது. இதில் ஹீரோயினியாக சன் டிவி யில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்று முடிவடைந்த “பூவே உனக்காக” சீரியலில் நடித்த ஜோவிதா லிவிங்ஸ்டன் அவர்கள் நடிக்க இருக்கிறார் என தெரிய வந்துள்ளது.


மேலும் இவர் முதலில் வெள்ளித்திரையில் “கலாசல்” எனும் படத்திலும் நடித்துள்ளார். இப்படம் எதிர் பார்த்த அளவு வெற்றி தராத நிலையிலே சின்னத்திரை நோக்கி வந்துள்ளார் .

Exit mobile version