Site icon

உங்களுக்கு கை நடுக்கம் இறுக்கிறதா..? நிறுத்துவது இப்படித்தான்… கைநடுக்கம் இந்த நோய்களுக்கெல்லாம் அறிகுறி..!

வயோதிகர்களுக்கு நடுக்கம் இருப்பது பொதுவான ஒன்று தான். அதிலும் கைநடுக்கம் அவர்களுக்கு பெரும்பாலும் இருக்கும். ஆனால் இன்றெல்லாம் இளவயதினருக்கே கைநடுக்கம் இருக்கிறது. ஆனால் இளவயதில் வரும் கைநடுக்கம் பல்வேறு நோய்களுக்கான ஆரம்ப அறிகுறி என்பது நம்மில் பலருக்கும் தெரியவில்லை.

கைநடுக்கம் எதனால் எல்லாம் ஏற்படும் தெரியுமா?உடலின் இயக்கங்களை கட்டுப்படுத்தும் மைய நரம்பு மண்டலத்தின் பாதைகளில் பாதிப்பு இருந்தாலும் கை நடுங்கும். இந்த நோய் எம்.எஸ் என மருத்துவ வார்த்தையில் சொல்லப்படும். அதாவது, பலமடங்கு ஸ்களீரோசிஸ்.

இதேபோல் தமனிகளில் ரத்தக்கட்டு ஏற்படும்போது, அது மூளைக்கு போகும் இரத்தத்தை தடுக்கும். இதனால் மூளை பக்கவாதம் ஏற்படும். நரம்பியல் பாதைகோளாறின் அறிகுறிகளில் ஒன்று நடுக்கம். மூளையில் ஏற்படும் காயம், பாதிப்புகள் கூட கைநடுக்கத்துக்கு காரணம் தான்.

நிபுணன் படத்தில் நடிகர் அர்ஜூன் பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பார். அந்த நோய் தாக்கினாலும் கைநடுக்கம் இருக்கும். இவர்களுக்கு செயல்நேர நடுக்கம் ஏற்படும். பொதுவாகவே நடுக்கம் உடலின் ஒருபகுதியில் இருந்து தொடங்கி, பின்னர் உடல் முழுக்க பரவும். நாம் அதிகளவு உணர்ச்சிவசப்படும் நேரங்களிலும் கைநடுக்கம் ஏற்படும் வாய்ப்புண்டு.

டிஸ்டோனியா பாதிப்பு இருந்தாலும் நடுக்கம் வரும். இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூளை உறுப்புகளுக்கு தவறான செய்திகளை அனுப்பும். இதனால் தசைகள் அதிகமாக செயல்படுவது, செயல்படாமல் இருப்பது, விரும்பத்தகாத இயக்கங்கள் போன்றவை ஏற்படும். இளவயதினருக்கு உடலின் எந்த தசையிலும் இது ஏற்படும்.

சரி இந்த நடுக்கத்தை எப்படி நிறுத்துவது என கேள்வி எழலாம். பதட்டத்தினாலும், பயத்தினாலும் நடுக்கம் வந்தால் உளவியல் ரீதியான ஆலோசனை , தேவைப்பட்டால் உலவியல் சிகிட்சையின் மூலமும் அதைப் போக்கலாம். இதேபோல் காஃபின் போன்ற நடுக்கத்தை ஏற்படுத்தும் பொருள்களின் உபயோகத்தையும் குறைக்க வேண்டும். இதேபோல் தொடர்ச்சியாக நாம் செய்யும் பிசியோதெரபி, தசைகளின் மீது கட்டுப்பாட்டை கொண்டு வரும்.

ஆனாலும், இளவயதிலேயே வரும் கைநடுக்கத்தை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, உரிய சிகிட்ட்சை மேற்கொள்வது அவசியம்!

Exit mobile version