Site icon

காஞ்சாம்புரத்தில் காமராஜர் மக்கள் இயக்கம் துவக்கம்…

sssa

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், நடைக்காவு சந்திப்பில் காமராஜர் மக்கள் இயக்கத்தின் துவக்க விழா நடைபெற்றது.

நித்திரவிளை அருகில் உள்ள நடைக்காவு சந்திப்பில் உள்ள காமராஜர் சிலைக்கு அமைப்பின் தலைவர் காஞ்சாம்புறம் சதீஸ் மாலை அணிவித்து அமைப்பைத் தொடங்கினார். அமைப்பின் செயலாளராக மணிகண்டன், பொருளாளராக அருள்குமார் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிகழ்வில் அமைப்பின் தலைவர் காஞ்சாம்புறம் சதீஸ், காமராஜர் தமிழகத்தில் கல்விப் புரட்சியை ஏற்படுத்தினார். 9 ஆண்டுகால அவருடைய ஆட்சிகாலத்தில் தமிழகத்தில் மூடப்பட்ட அரசுப்பள்ளிகளைத் திறந்தார். அவர் ஆட்சிக்கு வந்தபுதிதில் 3.3 லட்சமாக இருந்த பள்ளி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, அவருடைய ஆட்சிகாலத்தில் 9 லட்சமாக உயர்ந்தது. ஏராளமான அணைக்கட்டுகள் மூலம் விவசாயிகளுக்கு பாசன வசதி செய்துதந்தார். மதிய உணவுத் திட்டம் மூலம் மாணவர் சேர்க்கையை அதிகரித்தார்.”என்பது உட்பட அவரது பணிகளை நினைவுகூர்ந்தார். தொடர்ந்து மன்றத்தின் நிர்வாகிகள் காமராஜர் ஸ்தூபி முன்பு நின்று உறுதிமொழியும் எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில், பிளாக் ஜெயராஜ், வழக்கறிஞர் விஜயகுமார், சசிகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Exit mobile version