திறமை என்பது வசதி படைத்தவர், ஏழை என இல்லாமல் அனைவருக்கும் பொதுவானது. யாருக்குத் திறமை இருக்கிறது என்பது யாராலுமே கணிக்க முடியாத விசயம் ஆகும். இங்கேயும் அப்படித்தான். ஒரு சாமானிய கலைஞனின் திறமை இணையத்தில் வேற லெவலில் வைரல் ஆகிவருகிறது.
ஒரு கிராமப்பகுதியில் திருவிழாவுக்காக கரகாட்டம் ஒன்றை புக் செய்திருந்தனர். இதற்காக கரகாட்டம் ஆடும் இளம் பெண்களும் வந்திருந்தனர். பொதுவாகவே கரகாட்டம் ஆடும் பகுதிகளில் மக்களும், குறிப்பாக இளைஞர்களும் கரகம் ஆடும் பெண்களை வைத்தக் கண் வாங்காமல் பார்ப்பது வழக்கம். ஆனால் இந்த கிராமத்தில் அவர்களைக் கூட பார்க்கமுடியாத அளவுக்கு அனைவரின் கவனத்தையும் ஒரு நாதஸ்வரக் கலைஞர் ஈர்த்து விட்டார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படத்தில் இடம்பெற்ற கண்டா வரச் சொல்லுங்க பாடலை அந்த கலைஞர் நாதஸ்வரத்தில் வாசித்தார். அதை அனைவரும் வைத்தக் கண் எடுக்காமல் பார்த்து ரசித்தனர். இதேபோல், சில இளைஞர்கள் அந்த நாதஸ்வரக் குரலுக்கு மயங்கி ஆட்டம் போட்டனர். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன். உங்களையும் அறியாமல் அந்த இசையினுள் மூழ்கிப் போவீர்கள்.