இந்த உலகில் தற்காப்பு கலை என்பது மிகவும் முக்கியமானதாக இப்போது இருக்கிறது. அதிலும் பெண் குழந்தைகள் இன்றைய காலத்தில் பல்வேறு சிக்கல்களை சந்திக்கின்றனர். அதனால் அவர்களுக்கு தறாப்பு என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். இதனாலேயே பல பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு குழந்தைப் பருவத்தில் இருந்தே தற்காப்புக்கலையைக் கற்றுக்கொடுக்கின்றனர்.
அந்தவகையில் இங்கே சீனாவிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. மூன்று வயதே நிரம்பிய குட்டிக்குழந்தையை அவரது பெற்றோர் கராத்தே வகுப்பில் சேர்ந்து விடுகிறார்கள். அந்தக்குழந்தை அந்த வகுப்பில் செய்யும் ரகளைகள் வேற லெவல் என்றே சொல்லிவிடலாம். பொதுவாகவே குழந்தைகள் எதைச் செய்தாலுமே அழகுதான். அதிலும் இங்கே நடந்திருக்கும் சம்பவத்தைப் பார்த்தால் சிரிப்பு பொத்துக்கொண்டு வருகிறது.
குறித்தக் காட்சியில் குழந்தை கராத்தே படிக்க செல்கிறது. அங்கு கராத்தே மாஸ்டர் காலால் மிதிக்க சொல்கிறார் ஒரு அட்டையை. ஆனால் குழந்தை தரையிலேயே மிதிக்கிறது. அதேபோல் மாஸ்டர் சொல்வதையே மீண்டும், மீண்டும் சொல்லிக்கொண்டு இருக்கிறது. கடைசியில் அந்த அட்டையைக் குழந்தை வேற லெவலில் உடைக்கிறது. இதைப் பார்த்துவிட்டு கராத்தே மாஸ்டர் உள்பட அனைவருமே சிரித்துவிட்டார்கள். இதோ அந்தக் காணொலி. நீங்களே பாருங்களேன்.