Site icon

காதலிக்க நேரமில்லை படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடனம் ஆடிய ஏ.ஆர்.ரகுமான்.. வெளியானது மேக்கிங் வீடியோ..!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி.  இவர் சமீபத்தில் நடித்து வெளியான படம் பிரதர்ஸ். அந்த படம் சொல்லும் அளவிற்கு பெரிதாக நல் விமர்சனங்களை பெறவில்லை. இந்நிலையில் இவர் தற்போது ரெட் ஜெயண்ட் மூவி தயாரிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கம் காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நித்யா மேனன், யோகி பாபு, லால், வினை, லக்ஷ்மி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். மேலும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

மேலும் இந்த படத்தின் முதல் பாடல் என்னை இழு இழு இழுக்குதடி என்ற பாடல் ஒரு வாரத்திற்கு முன்பு வெளி வந்தது.சோசியல் மீடியாவில் மிகவும் வைரல் ஆனது. 10 மில்லியன் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர். மேலும் இந்த படத்தினை டிசம்பர் 20 தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் ஆரம்பிக்க உள்ளது. இந்நிலையில் என்னை இழுக்குதடி பாடலின் ஷட்டிங் ஸ்பாட் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.

அதாவது அதில்  என்னை இழுக்குதடி பாடலுக்கு எப்படி நடனம் ஆடுவது என்று நடன கலைஞர்களிடம் கேட்டு ஏ.ஆர்.ரகுமான் நடனம் ஆடி பார்க்கிறார். மேலும் கிருத்திகா இப்படியா நடனம் ஆட வேண்டும் என்று முக பாவனை செய்கிறார். இதனை பார்த்து ரசித்து சிரிக்கிறார்கள் படக்குழுவினர். தற்போது அந்த ஷூட்டிங் ஸ்பாட் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Exit mobile version