தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ஜெயம் ரவி வித்தியாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் சமீபத்தில் நடித்து வெளியான படம் பிரதர்ஸ். அந்த படம் சொல்லும் அளவிற்கு பெரிதாக நல் விமர்சனங்களை பெறவில்லை. இந்நிலையில் இவர் தற்போது ரெட் ஜெயண்ட் மூவி தயாரிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கம் காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் நித்யா மேனன், யோகி பாபு, லால், வினை, லக்ஷ்மி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். மேலும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். மேலும் இந்த படத்தின் முதல் பாடல் என்னை இழு இழு இழுக்குதடி என்ற பாடல் ஒரு வாரத்திற்கு முன்பு வெளி வந்தது.
சோசியல் மீடியாவில் மிகவும் வைரல் ஆனது. 10 மில்லியன் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர். இந்நிலையில் ட்ரெண்டிங் காமெடி நடிகரான யோகி பாபு தற்போது இந்த பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Look who joined the #YennaiIzhukkuthadi craze – our favourite @iYogiBabu 💖🤩
— Red Giant Movies (@RedGiantMovies_) December 9, 2024
We can't stop vibing to this song on loop🫶 ▶️ https://t.co/qwHIHRH8U9
“காதலிக்க நேரமில்லை”#KadhalikkaNeramillai @actor_jayamravi @MenenNithya @astrokiru @RedGiantMovies_ @arrahman @tseriessouth… pic.twitter.com/FYtVxQF2Og