குழந்தைகள் எப்போது அழும்? எப்போது அடம்பிடிக்கும் என்பதே யாருக்கும் தெரியாத விசயம். அதேநேரம் குழந்தையின் அழுகையை சமாளிக்க ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான யுத்திகளைக் கடைபிடிப்பார்கள். இங்கேயும் ஒரு தாய் தன் குழந்தையின் அழுகையை சமாளிக்க வேற லெவலில் ஒரு யுத்தியைக் கடைபிடிக்கிறார். அது இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது.
அது குறித்துத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். பொதுவாக குழந்தைகளின் அழுகையை சமாளிப்பது ரொம்பவே கஷ்டம். அவர்கள் மனதில் எதையாவது நினைத்துக்கொண்டு அழுவார்கள். ஆனால் அது என்ன எனப் புரிந்துகொள்வதே மிகவும் சவாலான விசயமாக இருக்கும். இங்கேயும் அப்படித்தான் ஒரு குழந்தை அழுகின்றது. அது இடைவிடாமல் தொடர்ந்து அழுதுகொண்டே இருப்பதை பார்த்த அந்த குழந்தையின் தாய் உடனே இசையை ஒலிக்க செய்கிறார்.
அந்த இசையில் மெய்மறந்த குழந்தை தான் அழுதுகொண்டிருப்பதையே மறந்து நடனம் ஆடத் தொடங்குகிறது. இசைக்கு மயங்காதவர்கள் யாருமே இல்லை என்பதை மெய்பிக்கும் வகையில் இந்தச் சம்பவம் அமைந்துள்ளது.
இசையால் மயங்காதார் இதயம் எது…?🎵🎵🎵 pic.twitter.com/5vahNQre8D
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) March 3, 2022