சிலர் 50 வயதைத் தொட்டுவிட்டாலே தங்களுக்கு வயதாகி விட்டது என அலுத்துக் கொள்வார்கள். அவர்களே தங்களுக்கு வயதாகிவிட்டதென முதிர்ச்சியுடனும் நடந்துகொள்வார்கள். ஆனால் சிலரோ வயது என்பது வெறுமனே நம்பர் தான் என்பது போல் ஆட்டம், பாட்டம் என அமர்க்களப்படுத்துவார்கள். இதுவும் அப்படியான ஒரு மனிதரைப்பற்றிய கதைதான்!
நடனத்தைப் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. அதிலும் அழகான இளம்பெண்கள் ஆடினால் கண் இமைக்காமல் பார்ப்பது வாடிக்கைதான். சில நேரங்களில் சிலர் உற்சாக மிகுதியில் மேடையிலேயே ஏறி நடனத்தில் பட்டையை கிளப்புவதும் உண்டு. இங்கேயும் அப்படித்தான். வட இந்தியாவில் ஒரு ஸ்டேஜ் ப்ரோகிராம் நடந்து கொண்டிருந்தது. அழகிய இளம்பெண் ஒருவர் செமையாக ஆடிக்கொண்டிருந்தார்.
இதைப் பார்த்ததும் முன்வரிசையில் இருந்த சொட்டையர் ஒருவர், அதிலும் அசால்டாக அவர் 50 வயதைத் தொட்டிருப்பார். அவர் மேடை ஏறி செம குத்தாட்டம் போட்டார். கூடவே அவர் ஆடிக்கொண்டிருக்கும் போதே தரையில் கிடந்து பாம்பு போல் நெளிந்து, நெளிந்து வேற லெவலில் ஆடுகிறார். இதை வீடியோவாக எடுத்துக்கொண்டிருந்தவர்களே இதைப் பார்த்து விழுந்து, விழுந்து சிரித்தார்கள். இவ்வளவு ஏன், திறமையாக ஆடிக்கொண்டிருந்த இளம்பெண்ணே ஒரு நிமிடம் இதைப் பார்த்து ஆச்சர்யத்தில் உறைந்து போனார். இதோ நீங்களே அந்தக் காட்சியைப் பாருங்களேன்.