ஒருவனுக்கு ஒருத்தி என்பதெல்லாம் நம் தமிழ்பண்பாடுதான். இங்கே மிசோரத்தில் 70 வயதான முதியவர் ஒருவர், 39 மனைவிகளுடன் ஜம்மென வாழ்க்கையை நகர்த்துகிறார்.
இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். அடேங்கப்பா இன்றைக்கெல்லாம் வெங்காயம் விக்கும் விலைக்கு ஒரு குடும்பத்தை சாதாரணமாக நடத்திச் செல்வதே குதிரை கொம்பான விசயமாக இருக்கிறது. காரணம் அந்த அளவுக்கு விலைவாசி உயர்வு கண்ணை கட்டுகிறது. இப்படியான சூழலில் இந்த முதியவரின் வாழ்க்கையை பலரும் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர்.
மிசோரத்தை சேர்ந்த ஜியோனா சானாவுக்கு 70 வயதாகிறது. இவருக்கு 39 மனைவிகளும், அவர்களுக்கு பிறந்த 94 குழந்தைகளும் உள்ளனர். இப்போது இவர் வீட்டில் 14 மருமகள்களும், 33 பேரக்குழந்தைகளும் உள்ளனர். இப்போது இந்த வயதில் கூட அடுத்த திருமணத்துக்கு பெண் பார்க்கத் துவங்கி இருக்கிறார். இவ்வளவு பெரிய தன் குடும்பத்தை மெயிண்டைன் செய்யவே, தன் சொந்த கிராமத்தில் நூறு ரூம்கள் கொண்ட வீடு ஒன்றையும் கட்டி இருக்கிறார்.
அதிலும் அவர் ரூம் ஒதுக்குவதிலேயே பலரையும் புருவம் உயர்த்த வைக்கிறார். இளம் மனைவிகளை தன் படுக்கை அறைக்கு பக்கத்திலும், வயதாகிப்போன மனைவிகளுக்கு மாளிகையின் ஒதுப்புறத்திலும் ரூம் கட்டியிருக்கிறார்.
‘நான் கடவுளோட ஸ்பெசன் குழந்தை. அதனால்தான் என்னை கவனிச்சுக்க ஏராளமான சொந்தங்களை எனக்கு கடவுள் கொடுத்திருக்கிறார். நான் ரொம்ப அதிர்ஷ்டக்காரன். அதான் 39 மனைவிகளுக்கு கணவனாக இருக்கிறேன்”என நெகிழ்கிறார் ஜியோனா சானா…
யோவ்..எங்க ஊர்ல 90ஸ் கிட்ஸ்ங்களே பொண்ணு கிடைக்காம கண்ணை தள்ளிட்டு இருக்காங்க…இதுல இப்படியொரு கூத்தா?