தமிழ் சினிமாவில் கேப்டன் பிரபாகரன் என்ற படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நடிகர் மன்சூர் அலிகான். இவர் அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். வில்லன் கதாபாத்திரத்தில் தன்னுடைய நடிப்பை கச்சிதமாக வெளிப்படுத்துவார். இவருக்கு என்று ரசிகர்கர்கள் அதிகளவில் உள்ளனர். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்துள்ளார் . மேலும் இவர் முதலில் அரசியல் பயணத்தில் பாட்டாளி மக்கள் கட்சியினை ஆதரித்தவர்.
மேலும் இவர் இன்றளவும் விமர்சை ரீதியாகவும் சர்ச்சை ரீதியாகவும் பல பேசியுள்ளார். இந்நிலையில் இவரது மகன் அலிகான் துலக் நேற்று அதிரடியாக கைதாகி உள்ளார். அதாவது தற்போது போதை பொருள் ஒழிப்பில் சென்னை போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். அண்மையில் தனியார் கல்லூரி மாணவர்கள் சிலர் செல்போன் செயலி மூலம் போதை பொருள் விற்பனை செய்த வழக்கில் கைதானார்கள்.
இந்நிலையில் போதை பொருள் விசாரணையில் நடிகர் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துலக் நம்பர் சிக்கியுள்ளது. இதனால் அலிகான் துலக்கை நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்து ஜெ.ஜெ.காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்து வருகிறார்கள். இந்த தகவல் தற்போது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.