Site icon

முன்னணி நடிகருடன் இணைந்து அடுத்த படத்திற்கு தயாராகும் மாரி செல்வராஜ்…! சுவாரசியமான தகவல்கள்…!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவர் தான் மாரி செல்வராஜ். இவர் முன்னணி நடிகர்களை வைத்து படம் எடுத்து வருகிறார். அந்த வகையில் இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் அனைத்தும் வெற்றி படங்களாகவே அமைந்துள்ளன. இவருக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்நிலையில் பரியேறும் பெருமாள் முதல் கர்ணன், மாமன்னன் என வெற்றி படங்களையே கொடுத்து வரும் இவர் தன்னுடைய வாழ்க்கை கதையை வைத்து விஜய் சேதுபதி நடிப்பில் வாழை என்ற படத்தினை இயக்கினார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி இன்று வரை பல திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது.

சூப்பர் ஹிட் அடித்த இந்த படம் சினிமா வாழ்க்கையில் அவருக்கு ஒரு நல்ல மதிப்பை பெற்று கொடுத்தது. மேலும் இந்த படம் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் இந்த படத்தினை ரசிகர்கள் பாராட்டியும் கொண்டாடியும் வருகிறார்கள். மேலும் மாரி செல்வராஜ் நடிகர் விக்ரம் மகனான துருவ் விக்ரம் உடம் பைசன் என்னும் படத்தை இயக்கி வருகிறார்.

மேலும் இவர் நடிகர் தனுஷை வைத்து அடுத்த படம் எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது அவர் தனுஷுக்கு பதிலாக நடிகர் கார்த்தி வைத்து படம் எடுக்கலாம் என்ற யோசனையில் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.இந்த கூட்டணியும் இவருக்கு வெற்றி கூட்டணியாக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version