இப்போதெல்லாம் திருமண ஆர்டர்கள் எடுக்கும் கேமராமேன்கள், சினிமா ஒளிப்பதிவாளரையே மிஞ்சி சிந்திக்கின்றனர். அண்மையில் கேரளத்தில் மரத்தில் இருந்து தலைகீழாகத் தொங்கி ஒரு போட்டோகிராபர் மணமக்களை போட்டோ சூட் செய்யும் படம் இணையத்தில் வைரலானது. அதேபோல் இப்போது இன்னொரு மணபெண்ணின் போட்டோசூட் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருமணத்தை புகைப்படம் எடுக்கும் கேமராமேன்கள் தங்கள் தனித்திறமையை காட்டும் வகையில், திருமண சடங்குகள், மண்டப நிகழ்வுகளைக் கடந்து வெளியே ‘அவுட்டிங்’ படங்களையும் இப்போது அதிக அளவில் எடுக்கின்றனர். வழக்கமான திருமண படங்களோடு, இந்த அவுட்டிங் படங்களும் சேரும் போது கல்யாண ஆல்பமே கிளாஸிக்காக இருக்கும் என்பதாலேயே இப்படி செய்கின்றனர்.
இங்கேயும் அப்படித்தான் ஒரு பெண்ணிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அடுத்த சில மணி நேரங்களில் கல்யாணம் நடக்க இருந்தது. மண மேடையில் மணக்கோலத்தில் இருந்த பெண், திடீரென போட்டோகிராபர், வீடியோகிராபரோடு ப்ரீ வெட்சிங் சூட்டிற்குப் போனார். அதுவும் எங்கே போனார் தெரியுமா? உடற்பயிற்சி கூடத்திற்கு! ஜிம்மிற்குப் போய் ஜம்மென வெயிட் லிப்டிங் செய்து சும்மா தெறிக்க விட்டார் இந்த மணப்பெண். அதுவும் முகூர்த்தப்பட்டிலேயே இதோ நீங்களே அந்தக் காட்சியைப் பாருங்களேன்.
Pre-wedding shoot…👇
— Rupin Sharma IPS (@rupin1992) November 19, 2021
Aaj raaz khula himmat ka……. pic.twitter.com/1d9bJDVMqa