இப்போதெல்லாம் திருமண ஆர்டர்கள் எடுக்கும் கேமராமேன்கள், சினிமா ஒளிப்பதிவாளரையே மிஞ்சி சிந்திக்கின்றனர். அண்மையில் கேரளத்தில் மரத்தில் இருந்து தலைகீழாகத் தொங்கி ஒரு போட்டோகிராபர் மணமக்களை போட்டோ சூட் செய்யும் படம் இணையத்தில் வைரலானது.
திருமணத்தைப் புகைப்படம் எடுக்கும் கேமராமேன்கள் தங்கள் தனித்திறமையை காட்டும் வகையில், திருமண சடங்குகள், மண்டப நிகழ்வுகளைக் கடந்து வெளியே ‘அவுட்டிங்’ படங்களையும் இப்போது அதிக அளவில் எடுக்கின்றனர். வழக்கமான திருமண படங்களோடு, இந்த அவுட்டிங் படங்களும் சேரும் போது கல்யாண ஆல்பமே கிளாஸிக்காக இருக்கும் என்பதாலேயே இப்படி செய்கின்றனர்.
இங்கேயும் அப்படித்தான் ஒரு ஜோடிக்கு திருமணம் நடந்தது. உறவுகள் படை சூழ அவர்களுக்கு வெட்டிங் போட்டோகிராபர் போட்டோ சூட் நடத்திக் கொண்டிருந்தார். வழக்கமான திருமண போட்டோவில் இருந்து மாறுபட்டு இதில் போட்டோகிராபர் ஒரு விஞ்ஞானியாகவே மாறிவிட்டார் எனச் சொல்லிவிடலாம். அப்படி என்ன செய்தார் எனக் கேட்கிறீர்களா?
இந்த போட்டோகிராபர் மணப்பெண்ணை நடக்கவிட்டு அவரைச் சுற்றிலும் செயற்கை மேகங்களை உருவாக்கி போட்டோ, வீடியோவாக எடுத்துக் கொண்டிருக்கிறார். இதற்காக அறிவியல் விஞ்ஞான முறைப்படி செயற்கை மேகத்தை உருவாக்குகிறார். இதில் மணப்பெண்ணும் கம்பீரமாக நடந்துவருகிறார். வீடியோவில் இதன் பேக்ரவுண்ட் பாடலில், ‘மேகக் கூட்டம் இடையில் சிக்கி வளைஞ்சு, நெளிஞ்சு போறா…போறா’ பாடலையும் ஒலிக்கச் செய்துவிட்டார். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன்.