Site icon

அதிகளவில் காதல் படங்கள் வரவேண்டும்.. காதல் படங்கள் குறைந்து விட்டது என்று வருத்தத்தில் பேசிய நடிகர் கார்த்தி..!

நடிகர் சித்தார்த் தற்போது நடித்துள்ள படம் மிஸ் யூ. இந்த படத்தினை சாமுவேல் மேத்யூ மற்றும் மோனிகா இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்தில் ஆஷிகா ரெங்கநாதன், பாலா சரவணன், கருணாகரன், ஜெயப்ரகாஷ், பொன்வண்ணன், நரேன், அனுபமா குமார், ரமா  உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். மேலும் இந்த படத்தினை 29 ம் தேதி ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தி.

 அதில் பேசும் பொழுது தன்னை யாரும் சினிமா குடும்பத்தை சார்ந்தவன் என்று சொல்லமாட்டார்கள் எனவும் மேலும் நான் உதவி இயக்குனரான சினிமாவில் சேர்ந்த போது சித்தார்த், மிலிந்த், சுதா கொங்குரா போன்றோரும் அங்கு இருந்தார்கள். அவர்கள் பேசும் பொழுது அவர்களுக்கு தெரிந்த எதுவும் எனக்கு தெரியவில்லை. மறுபடியும் நான் கடைசி பென்ச் தான் என்று பேசியுள்ளார்.

மேலும் தற்போதெல்லாம் காதல் படங்கள் குறைந்து விட்டது எனவும் அதிகளவில் காதல் படங்கள் வரவேண்டும் எனவும் பேசியுள்ளார். மேலும் விஜய் நடிப்பில் வெளிவந்த துள்ளாத மனமும் துள்ளும் படமும் அதில் உள்ள பாடல்களும் மிகவும் பிடிக்கும் எனவும் அந்த மாதிரி படங்களை இன்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் எனவும் மேலும் அந்த மாதிரி காதல் படங்களை நிறைய எடுக்க வேண்டும் எனவும் சூப்பராக பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Exit mobile version