காலையில் தூங்கி முழித்ததுமே பெட் காபியுடன் எழுபவர்களின் தலைமுறை உருவாகிவிட்டது. காலையில் எழுந்ததும் டீ, காபி குடிக்கலாமா என்பதே விவாதத்துக்கு உரிய விசயம். பொதுவாக காலையில் எது ஆரோக்கியமான உணவு தெரியுமா? வெறும் வயிற்றில் நாம் சாப்பிடும் முதல் உணவு, அமிலச்சுரப்பு அதிகம் இல்லாத உணவாக இருக்க வேண்டும். அதுதான் நம் குடலைப் பாதிக்காது.
அந்த வகையில் விட்டமின் சி சத்துகள் அதிகம் நிறைந்த உணவை காலையில் எடுத்துக்கொள்ள வேண்டும். இது வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்தி மூளைக்கு அதிக ஆக்சிஜனை கொடுக்கும். இந்த வகை உணவுகளை காலையில் சாப்பிடுவதால் நாள் முழுக்க சுறுசுறுப்பாக இயங்க முடியும்.
வைட்டமின் சி உணவுகள்..
இனி எந்த உணவில் எல்லாம் வைட்டமின் சி இருக்கிறது என பார்ப்போம். சம்பா ரவை உப்புமா, உடைக்காத முழுத்தானியங்களால் செய்யப்பட்ட இட்லி, தோசை, சோள உப்புமா, தபிடு நீக்காத கோதுமை சப்பாத்தி, சிறுதானிய உணவுகள், முளைகட்டிய பயிறுகள், கேழ்வரகு தோசை, ரொட்டி இதில் எல்லாம் வைட்டமின் சி சத்து அதிகம். இதேபோல் பால்,தயிர், பாலாடைக்கட்டி ஆகியவை சுண்ணாம்புச் சத்தும், மூளை, நரம்பு மண்டலத்துக்கு தேவையான வலிமையையும் கொடுக்கின்றன. இதேபோல் எழுமிச்சை சாற்றுடன், தண்ணீர் சேர்த்து குடித்தால் அந்த நாளே உற்சாகமாகிவிடும்.
இதேபோல் பருப்பு, பால், சோயாபீன்ஸ், முட்டை, இட்லி போன்றவற்றை காலை உணவாக எடுத்துக்கொண்டால் நல்லது. அதில் இருக்கும் புரதச்சத்து உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும்.
காலையில் முட்டை சாப்பிடலாம். இதில் கால்சியம், சோடியம், பொட்டாசியம், ஒமேகா 3 ஆகியவையும் உள்ளது. இதேபோல் காலையில் பால் குடித்தால் அதில் இருக்கும் புரதம், கால்சியம் ஆகியவை நம் எலும்புகளை வலுப்படுத்தும். இதேபோல் வாழைப்பழம் சாப்பிடலாம். இது நம் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதேபோல் காலையில் பேரீச்சம் பழமும் சாப்பிடலாம். இதை மட்டும் சாப்பிட்டு பாருங்க. அந்த நாள் முழுவதும் உற்சாகமாக பீல் செய்வீர்கள்.