என்ன தான் உயிருக்கு உயிரான நண்பராக இருந்தாலும் அவர் வாயைத் திறந்தாலே துர்நாற்றம் வீசினால் தாங்கிக் கொள்ள முடியுமா? இப்போது அந்த நண்பனாக நம்மையே நினைத்துப் பாருங்கள். நான்கு பேருக்கு இடையே பேசக் கூட தயக்கம் தரும் விஷயம் தான் ‘’வாய் துர்நாற்றம்”!
வாய் துர்நாற்றத்துக்கு காரணமே நாம் சாப்பிடும் உணவுகள் தான். வாய்துர்நாற்றத்தை உருவாக்கும் உணவுகளில் வெங்காயம், பூண்டுக்கு முக்கியப்பங்கு இருக்கிறது. இந்த வெங்காயம் அல்லியம் குடும்பத்தைச் சேர்ந்தது. வெங்காயத்தை உரிக்கும்போதே அது வாயுவை வெளியிடும். இதனால் உருவாகும் பாக்டீரீயா துர்நாற்றத்தை உருவாக்கும். வெங்காயம் செரிக்கும் போது அதன் வாசனை மூலக்கூறு நுரையீரலை அடைந்து இரத்தத்தில் கலப்பதால் துர்நாற்றத்தை வெளியிடுகிறது.
வெங்காயம், பூண்டு சாப்பிட்டுவிட்டு அதன் பின்னர் ஒரு டம்ளர் பாலைக் குடித்தால் இதனால் வரும் துர்நாற்றம் மட்டுப்படும். இதேபோல் எழுமிச்சையும் நல்ல பலனைக் கொடுக்கும். அதில் இருக்கும் ஆண்டி பாக்டீரியல் பண்புகள் கெட்ட வாசனையை ஏற்படுத்தும் பாக்டீரீயாக்களை அழிக்கிறது. இரு டீஸ்பூன் எழுமிச்சை சாறை தண்ணீரில் கலந்து குடித்தால் துர்நாற்றம் போய் விடும். இந்த கலவையில் வாயும் கொப்பளிக்கலாம்.
இதேபோல் பேக்கிங் சோடா நம் வாயில் இருக்கும் அமில, காரத்தன்மையை சமநிலையில் வைப்பதால் வாயில் ஏற்படும் துர்நாற்றம் கட்டுப்படுகிறது. கொத்தமல்லி இலைகளை மென்று பாருங்கள். வாய் துர்நாற்றம் ஓடிவிடும். சர்க்கரை நம் வாயில் கெட்ட வாசனையை உருவாக்கும் பாக்டீரீயாக்களை அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் எப்போதெல்லாம் நம் வாயில் துர்நாற்றத்தை உணர்கிறோமோ, அப்போதெல்லாம் கொஞ்சம் சர்க்கரையை போட்டு மெல்லலாம். இதேபோல் ஆப்பிள், ஆப்பிள் ஜீஸ் ஆகியவையும் நல்ல பலன் தரும்…முயற்சித்துப் பாருங்களேன்..