சாப்பாட்டில் தினம் ஒரு கீரைவகைகளை சேர்த்துக் கொண்டாலே நம் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். அதைத்தான் நம் முன்னோர்கள் உணவே மருந்து எனச் சொல்லி வைத்தார்கள். அந்தவகையில் முருங்கை கீரையில் அதிகளவிலான சத்துக்கள் கொட்டிக் கிடக்கிறது.
இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். முருங்கைக் கீரையில் விட்டமின் சி சத்து அதிகளவில் இருக்கும். ஆரஞ்சு பழத்தில் இருக்கும் விட்டமின் சியின் அளவைக் காட்டிலும் இது ஏழு மடங்கு அதிகம். இதேபோல் கேரட்டில் இருப்பதைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகமாக விட்டமின் ஏ சத்து இதில் அதிகம்.
மற்ற கீரைவகைகளில் இருக்கும் இரும்புச்சத்தைவிட 25 மடங்கு அதிகமாக முருங்கைக் கீரையில் இருக்கிறது. அதேபோல் வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியத்தைவிட இரு மடங்கு முருங்கை கீரையில் அதிகம் உள்ளது.
பாலைவிட முருங்கை கீரையில் புரதச்சத்தும் 2 மடங்கு அதிகம். முட்டையில் இருக்கும் மெக்னீசியத்தைவிட இதில் 36 மடங்கு அதிகம். அதேபோல் கால்சியம் சத்து பாஇல் இருப்பதைவிட நான்கு மடங்கு அதிகம். வாழைப்பழத்தை விட இதில் 50 மடங்கு விட்டமின் பி 2 சத்தும் அதிகம். அதேபோல் வேர்கடலையை விட கூடுதலாக விட்டமின் பி 3 சத்து இதில் இருக்கிறது.
மேலும் உங்கள் வாழ்வில் அதிகம் முருங்கை கீரை சாப்பிட்டு வர முதுமையிலும் நீங்கள் கைத்தடி இல்லாமல் வெறும் கையுடன் நடக்கலாம்.இதனாலே முன்னோர்கள் முருங்கை உண்பவன் வெறும் கையோடு நடப்பானாம் என கூறியுள்ளனர்.எனவே இனி முருங்கைக்கீரை கிடைத்தால் சாப்பிடாமல் மிஸ் செய்துவிடாதீர்கள் நண்பர்களே…