Site icon

மலையாளிகள் கொண்டாடும் நவார அரிசி.. சாப்பிட்டு பாருங்க, பல நோய்களும் விலகியோடும் ஆச்சர்யம்..!

உணவே மருந்து என்பது பழமொழி. நாம் உண்ணும் உணவில் தான் நமது உடலின் ஆரோக்கியமே இருக்கிறது. அதனால் தான் நம் முன்னோர்கள் மிகவும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை வைத்திருந்தனர். ஆனால் இன்றோ உணவே விஷமாகி விட்ட சூழல் நிலவுகிறது. இந்த சூழலிலும் மலையாளிகள் ஒரு மூலிகை அரிசியை விரும்பி சாப்பிடுகின்றனர்.

பழுப்பு நிறத்தில் இருக்கும் இந்த அரிசியின் பெயர் ‘நவார அரிசி’ இது கேரளாவில் அதிகம் விளையக் கூடியது. இதன் பூர்வீகமும் கேரளம் தான். குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இந்த அரிசியை சாப்பிடலாம். ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த நவார அரிசி முக்கியப்பங்கு வகிக்கிறது. இந்த அரிசியில் மூலிகைத்தன்மை இருப்பதால் உடலுக்கு உறுதியைக் கொடுக்கும். நோய் நொடி இன்றி நீண்ட கால வாழ்வுக்கு அடித்தளம் இடும். ரத்தச் சுத்திகரிப்பு, உடலில் நச்சுக்களை வெளியேற்றல் ஆகியவற்றுக்கும் இந்த அரிசி முக்கியப்பங்கு வகிக்கிறது.

நவார அரிசியில் நார்ச்சத்து அதிகம். இதனால் இந்த அரிசி சீக்கிரம் செரிமானம் அடையும். இதற்கு மலச்சிக்கல், வயிற்று உப்புசத்தையும் குணப்படுத்தும் ஆற்றல் உண்டு. இதே போல் இந்த அரிசி நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். இந்த அரிசியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையும் கணிசமாய் உயரும். இதுதான் நம் உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் போர் வீரர்கள்.

குழந்தைகள் சுறுசுறுப்புடன் இயங்கவும், புத்திசாலியாக வளரவும் இந்த அரிசி அடித்தளமிடும். கரு ஆரோக்கியமாக வளரும் என்பதால் கர்ப்பிணி பெண்கள் இதை அதிகம் சாப்பிடலாம். ரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் கொண்டு வரவும் இந்த அரிசி உதவும். சோம்பலை போக்கி சுறுசுறுப்பையும் இந்த அரிசி தரவல்லது. இந்த அரிசியை அப்படியே வேகவைத்து பால் சேர்த்து சாப்பிடலாம்.

அல்லது இந்த அரிசியை பொடியாக்கி கூழ் போன்று பால் சேர்த்தும் சாப்பிடலாம். மூட்டு வலி, கால் வீக்கத்தையும் குணப்படுத்தும் ஆற்றல் இந்த அரிசிக்கு உண்டு. இனி உங்க வீட்டிலும் இந்த அரிசியை வாங்கலாமே? பெரும்பாலான இயற்கை அங்காடிகளில் கிடைக்கிறது.

Exit mobile version