தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் நாகார்ஜுனா. தமிழ் சினிமாவிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் கூலி படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவருடைய முதல் மகன் தான் பிரபல நடிகர் நாக சைதன்யா. இவரும் நடிகை சமந்தாவும் திருமணம் செய்து அவர்களது திருமண வாழ்க்கை விவகாரத்தில் முடிந்தது.
இந்நிலையில் இவருக்கு அண்மையில் நடிகை சோபிதா தூளிபாலியுடன் திருமண நிச்சயம் முடிந்தது. விரைவில் திருமணம் நடக்க உள்ளது. நடிகர் நாகர்ஜூனா மற்றும் நடிகை அமலாவின் மகன் அகில் அக்கினி. இவர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்க ஆரம்பித்தவர். அதை தொடர்ந்து தெலுங்கில் மனம் என்ற படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகம் ஆனார். அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் இவர் இறுதியாக ஏஜென்ட் என்ற படத்தில் நடித்தார்.
இந்நிலையில் இவருக்கும் ஸைனப் ராவ்தேஜ்க்கும் நிச்சயம் தட புடலாக நடந்து முடிந்தது. விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளது. இந்நிலையில் அகில் மற்றும் அவருடைய காதலி வயது குறித்த தகவலைகள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது அகில்லை விட அவருடைய காதலிக்கு வயது அதிகமாம். அகில்க்கு 30 வயதும் அவருடைய காதலி ஷைனப்க்கு 39 வயதாம். அகிலை விட 9 வயது பெரியவராம். இந்த தகவல் வெளிவந்த நிலையில் இது தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.