தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான நடிகை நயன்தாரா ஐயா படத்தின் மூலமாக தான் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். இவர் நடித்த முதல் படமே இவருக்கு வெற்றி படம் தான். மேலும் அதனை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்தார். அதுவும் இவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. தொடர்ந்து இவர் முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார். வல்லவன் படத்தில் நடித்ததன் மூலமாக நடிகர் சிம்புவை காதலித்தார் பின்னர் பிரேக் அப் ஆனது. அதன் பிறகு வில்லு படத்தில் நடிக்கும் பொழுது அதன் இயக்குனர் பிரபு தேவாவை காதலித்தார் பின்னர் அதுவும் பிரேக் அப் ஆனது.
மேலும் நானும் ரவுடி தான் படத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்தார். பின்பு லேடி சூப்பர் ஸ்டார் நயனும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் பெரும் விமர்சையாக நடந்தது. மேலும் இவர்களுக்கு உயிர் மற்றும் உலக் என 2 மகன்கள் இருக்கின்றனர். இந்த நிலையில அவங்களோட திருமண வாழ்க்கையை பற்றி ஒரு ஆவணப்படம் எடுக்கப்பட்டிருந்தது. அந்த படம் நெட்ப்ளிக்ஸில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் நடிகர் மிர்ச்சி சிவா ஊடகம் ஒன்றில் பேசிய பொது நானும் ரவுடி தான் படத்தில் முதலில் எனக்கு தான் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது எனவும் மேலும் அதில் நடிப்பதற்கு நான் மறுத்ததாகவும் நான் நடித்திருந்தால் எனக்கு ஜோடியாக நயன் நடித்திருக்க மாட்டார். எனவும் மேலும் என்னால் தான் நயனும் விக்கியும் ஒருவரை ஒருவர் சந்தித்தார்கள் எனவும் விக்கி இப்போது ஹாப்பியா இருப்பதற்கு நான் தான் காரணம் எனவும் என்னால் தான் அவர்களுக்கு திருமணம் நடந்தது எனவும் செம ஜாலியாக பேசியுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.