வலி எவ்வளவு கொடூரமானது என்பது அதை அனுபவிப்பவர்களுக்கு மட்டும்தான் தெரியும். அதிலும் மூட்டு, குதிகால் வலியின் தொல்லையைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். சிறிய தூரத்தைக் கூட நடந்து கடக்கமுடியாமல் பெருந்துயருக்குள் சிக்கிக் கொண்டு தவிப்பார்கள். இதோ இதை மட்டும் செய்யுங்கள். எப்பேர்பட்ட நாள்பட்ட மூட்டு, குதிகால் வலியும் ஓடிப்போய்விடும். இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
பொதுவாகவே மனிதனின் குதிகால் பகுதியில் தேலஸ், கேல்கேனியஸ் என்ற இரண்டு எழும்புகள் உள்ளது.இந்த இரு எழும்புகளுக்கு இடையே உள்ள சப்தேலார் என்ற பகுதியில் ஏற்படும் பிரச்னையே குதிகால்வலிக்கு காரணம். இதேபோல் பாதத்தில் பிளாறார் பேசியா என்ற மெல்லிய சவ்வு உள்ளது. இது பாதத்தின் முன்பகுதியையும், பின்பகுதியில் உள்ள கேல்கேனியம் எலும்பையும் இணைத்து பாதத்தில் உள்ள வளைவுகளை தாங்குகிறது.
இந்த வலிகளை எருக்கன் செடியின் மூலமே குணம் செய்யலாம். 12 வருடம் மழையில்லாவிட்டாலும் எருக்கன் செடி வளரும். கிராமப்பகுதிகளில் முள் குத்தினாலும்கூட எருக்கன் பாலை தடவும் வழக்கம் இருக்கிறது. இந்த எருக்கன் இலையை வைத்தே கை, கால், மூட்டுவலியைக் குணப்படுத்தமுடியும். நம் வீட்டில் இருக்கும் அடுப்பின் மீது ஒரு செங்கலை வைத்து நன்றாகச் சூடாக்க வேண்டும்.அதன்பின் செங்கலை அடுப்பில் இருந்து எடுத்து தரையில் வைக்கவேண்டும். தொடர்ந்து, அந்த செங்கலின் சூடான பகுதிக்குமேல் எருக்கன் இலைகளை வைக்கவேண்டும். இப்போது ஒரு சேரில் உட்கார்ந்துகொண்டு காலை மட்டும் தூக்கி செங்கலுக்கு மேல் வைக்கப்பட்டு இருக்கும் இந்த எருக்கன் இலையின் மீது வைக்க வேண்டும். தொடர்ந்து இதேபோல் 10 முதல் 15 நாள்கள் செய்தால் குதிகால் வலி போய்விடும். இதேபோல் கை, கால்களில் வலியுள்ள இடத்தில் இதேபோல் ஒத்தி கொடுத்தாலும் வலி போய்விடும். இதோ இதை விளக்கும் வீடியோவையும் பாருங்கள்..