நடிகர் நெப்போலியன் 90-கிட்ஸ்களை பயமுறுத்திய பயங்கர வில்லன் நடிகர் ஆவார். வில்லன் நடிகர் ரகுவரன், ஆனந்தராஜ், ராதாரவி போன்றவர்கள் வில்லன் நடிகர்களாக கோலோச்சி வந்த அதே காலகட்டத்தில் வில்லன் மற்றும் கதாநாயகன் கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார்.
நெப்போலியன் என்று சினிமாவிற்காக மாற்றி கொண்ட இவரது இயற்பெயர் குமரேசன்துரைசாமி. திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பட்டம் பெற்றுள்ளார். அதன் பிறகு திராவிட முன்னேற்ற கழக கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இயக்கத்தில் சேர்ந்துள்ளார். அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் இவரின் மாமா ஆவார். நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் சினிமாவில்….. தனது முதல் படம் மூலம் 1991-ல் இயக்குனர் பாரதி ராஜா இயக்கத்தில் புது நெல்லு புது நாற்று என்ற திரைப்படத்தில் அறிமுகம் ஆனார்.பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த நடித்த எஜமான் திரைப்படத்தில் வில்லனாக மக்களிடம் பிரபலம் ஆனார். அதன் பிறகு தமிழ், மலையாளம்,தெலுங்கு திரைத்துறையில் வில்லனாக நடித்து புகழ் பெற்றார். சீவலபேரி பாண்டி திரைப்படத்தில் கதநாயகனாக நடித்தற்காக தமிழ்நாடு மாநில திரைப்பட விருது கிடைத்தது.
அரசியலில் களம் புகுந்து மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று 2009-ம் ஆண்டு மத்திய சமூகநீதி துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார். பின்னர் அரசியலில் இருந்து விலகி குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு இடம் பெயர்ந்துள்ளார்.
நெப்போலியன் அவர்களின் மகன் பிரபல யூ-டூப் சேனல் இர்பான் வியூவ்ஸ் அவர்களின் ரசிகர். தற்போது அமெரிக்காவில் டென்னஸி என்ற பகுதியில் சொந்தமாக அரண்மனை போன்ற வீட்டை கட்டி குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். இவருக்கு ஜெயசுதா என்ற மனைவியும், தனுஷ், குணால் என்ற இரு மகன்கள் உள்ளனர். இதில் ஒரு மகனுக்கு உடல் நல குறைபாடு உள்ளதால் அவர் திருநெல்வேலி பாபநாசம் அருகில் உள்ள ஒரு நாட்டு மருத்துவத்தில் சிகிக்சைக்காக சென்ற நிலையில் அங்கு வரும் நோயாளிகள் தங்குவதற்கு வசதி வாய்ப்புகள் இல்லாததால் சாதாரண மக்கள் தங்கி சிகிக்சை பெறுவதற்காக தனது சொந்த செலவில் மருத்துவமனை ஒன்றை கட்டி கொடுத்துள்ளார்.
அரண்மனை போல் ஜொலிக்கும் அவரது வீடு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த படங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது……
pic1
pic2
pic3
pic4
pic5
pic6
pic7
pic8