Site icon

கடலுக்கு மீன்பிடிக்கப் போனவருக்கு ஆள் கடலில் கிடைத்த அதிர்ஷ்டம்.. என்ன தெரியுமா..?

ஒருநாள் போவார்…ஒருநாள் வருவார்…ஒருநாள் நிலையாய் போய் விடுவார் என படகோட்டி படத்தில் எம்.ஜி.ஆர் பாடும் பாடலைப் போல, மீனவர்களின் வாழ்க்கை நிச்சயமற்றது. கடல் மாதா சிலநேரம் அள்ளிக் கொடுப்பார். அப்படி ஒரு மீனவர்களுக்கு ஒரே ஒரு மீன் மூலமே கடல் மாதா 2 லட்சத்தை அள்ளிக் கொடுத்து இருக்கிறார்

இதுகுறித்த விபரம் வருமாறு, ‘’ஒடிசா மாநிலத்தில் நாராயணா ஜெனா என்ற மீனவர் வழக்கம்போல் நேற்றும் மீன்பிடிக்கப் போனார். வழக்கமாக சில ஆயிரங்களுக்கு மீன்பிடித்து திரும்பும் ஜெனாவுக்கு, அன்றைய தினத்தில் பெரும் அதிர்ஷ்டம் காத்திருந்தது.

அன்றைய தினம் ஜெனாவின் வலையில் ghol என்னும் அரியவகை மீன்கள் சிக்கியது. இந்த மீன்கள் சராசரியாக 30 கிலோ எடை உடையவை. இந்த ரக மீன் ஒருகிலோ 6000 ரூபாய்! நேற்று ஒரேநாளில் அவருக்கு 2 லட்ச ரூபாயை இந்த மீன்கள் சம்பாதித்து கொடுத்தது.

அப்படி, இந்த மீனில் என்ன விசேசம் என்கிறீர்களா? இதன் மருத்துவ குணமே காரணம். இதன் தோல்கள் அழகு சாதனப் பொருள்களின் தயாரிப்புக்கு பயன்படுகிறது. இதன் தோலைக் கொண்டே மது சுத்திகரிப்புக்கு பயன்படுகிறது. இதன் சுவாசப்பைகளே லட்சம் ருபாய் வரை விலை போகுமாம்.

அடேங்கப்பா…ஆழ்கடலுக்குள் இப்படி ஒரு அதிசயமா?

Exit mobile version