முருங்கைக்காய் என்றாலே பாக்யராஜை நினைவுக்கு கொண்டு வரும் அளவில் ஒரு கதைக்களத்தை நமக்கு முந்தானை முடிச்சு படத்தின் மூலம் கொடுத்தவர் தான் டைரக்டர் பாக்யராஜ் . இவரை இயக்குனர் மட்டுமென்று சொல்லிடமுடியாது. இவர் நடிகர், இயக்குனர், கதையாசிரியர், தயாரிப்பாளர் என பல திறமைகளை காட்டியவர்.
இவருக்கு முதல் திருமணம் ஆகி உடல் நலக் குறைவால் மனைவி இறந்த நிலையில் 1984ல் நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்தார். பாக்யராஜ் மற்றும் பூர்ணிமாவிற்கு சரண்யா,சாந்தனு என ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். சாந்தனு சினிமாவில் சித்து+2வில் நாயகனாக அறிமுகமானார். ஆனாலும் அவருக்கு சரியான படம் வாய்ப்பு அமையவில்லை .
அதேபோல் தான் பாக்யராஜின் மகள் சரண்யா அவர்கள் பாரிஜாதம் படம் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானார். பின் சில படங்கள் நாயகியாக நடித்தார், ஆனால் அவருக்கு வெற்றி படம் என்று சொல்லும் அளவில் எதுவும் இல்லை. இந்நிலையில் நடிகை சரண்யா அவர்கள் சினிமாவை விட்டு விலகிய காரணத்தை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
நான் சில படங்கள் ஹீரோயின் ஆக நடித்திருந்தாலும் எதிர்பார்த்த அளவு வெற்றி தரவில்லை எனவும் கதாநாயகியாக மட்டும் இல்லை அப்பாவிற்கு உதவியாக பலபடங்களில் வேலை செய்துள்ளேன். சரியான வாய்ப்புகள் வராததால் தான் நான் சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடியவில்லையே தவிர சினிமாவை விட்டு விலகிட வேண்டும் என்று எப்போதுமே நான் நினைத்தது இல்லை எனவும் கூறியுள்ளார்.