நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் புஷ்பா. இந்த படத்தில் நடிகை ரஷ்மிகா, பகத் பாசில், சுனில் அனுஷியா உட்பட பலர் நடித்துள்ளனர் இந்த படம் செம்மர கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பாகம் வெற்றி அடைந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் புஷ்பா 2 இன்று வெளிவந்த நிலையில் திரையரங்குகளில் தமிழ் நடிகர் இளையதளபதி விஜயின் புகைப்படத்தை காட்டி ஆரவாரபடுத்தி உள்ளனர் கர்நாடக விஜய் ரசிகர்கள். தற்போது இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது. விஜய்க்கு தமிழில் மட்டும் அல்ல அணைத்து மொழிகளிலும் ரசிகர்கள் உள்ளனர் என்பதை ரசிகர்கள் உணர்த்தி உள்ளனர்.
தற்போது விஜய் தளபதி 69 படத்தினை எச் வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் இசையமைப்பாளர் அனிரூத் இசையம்மைக்கிறார்.மேலும் இந்த படத்தில் கெளதம் மேனன் இணைந்துள்ளார். மேலும் இந்த படத்தில் பிரகாஷ் ராஜ் நரேன் பூஜா ஹெஹ்ட் மம்தா பாபி தியால் ஆகியோர் நடித்து வருகின்றன்ர் மேலும் விஜய் தற்போது அரசியலில் இறங்கியுள்ளார். தளபதி 69 தான் விஜயோட கடைசி படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.