சினிமாவில் பொதுவாகவே ஒரு படம் வெளிவந்தால் அதனை தியேட்டரில் சென்று கண்டுகளிக்க ஒரு கூட்டம் ரசிகர்கள் உள்ளனர். அதுவும் பொதுவாக ஒவ்வொரு தியேட்டருக்கு என்று கூட ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் PVR திரையரங்குக்கு என்றும் பெரிதளவில் ரசிகர்கள் உள்ளனர். பொதுவாகவே பலருக்கும் PVR எஎன்றால் என்ன அதனுடைய விரிவாக்கம் என்னவாக இருக்கும் என்ற சந்தேகம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதாவது PVR என்ற “பிரியா வில்லேஜ் ரோட்ஷோ”.
இந்த திரையரங்குகளில் பெரிதளவிலான ஸ்கிரீன் வைக்கப்பட்டிருக்கும். மேலும் அனைவரும் விருப்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ் போன்றவை இங்கு இருக்கும். மேலும் அனைவரும் படம் பார்த்து முடித்து விட்டு விரும்பி செல்பி எடுத்து கொள்ளும் இடமாகவும் இது அமைந்துள்ளது. இது பொதுவாக பெரிய பெரிய மால்களில் தான் காணப்படும்.
பிரியா எக்ஸ்பிட்டர்ஸ் மற்றும் வில்லேஜ் ரோட்ஷோ இந்த இரண்டு நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் தான் இது உருவானது என்று கூறலாம். மேலும் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா போன்ற முக்கிய நகரங்களில் தான் PVR திரையரங்குகள் காணப்படுகிறன. இதனுடைய உரிமையாளர் அஜய் பிஜ்லி ஆவர். இவருடைய தந்தை தான் 1978 ல் இதை முதலில் தொடங்கினர். மேலும் இந்தியா மற்றும் இலங்கையில் பல இடங்களில் இந்த திரையரங்குகள் காணப்படுகின்றன.