ஒரு கடல்வாழ் உயிரினம் நூற்றுக்கணக்கில் கால்களுடன் இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் பலராலும் பகிரப்பட்டுவருகிறது.
இந்த உயிரினம் அலாஸ்கா கடற்கரை அருகில் சில வாரங்களுக்கு முன்பு பிடிபட்டுள்ளது. இதை ‘’ஆங்கலர் வாசர் அலபோர்டு’’ என்பவர் தன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது நூற்றுக்கும் அதிகமான கால்களைக் கொண்டுள்ளது. இந்த உயிரினத்தின் பெயர் ‘பாஸ்கெட் ஸ்டார்’ என்பதாகும். இதை மீண்டும் கடலுக்குள்ளேயே விட்டு விட்டார் பிடித்தவர்.
இந்த உயிரினம் கடலுக்குள் ஊர்ந்து போய் தனக்கான இரையைத் தேடும். நட்சத்திர மீன் வகையைச் சேர்ந்த இது பார்ப்பவர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இதோ அந்த வீடியோவைப் பாருங்கள்..