Site icon

இப்படி இருந்த ரஷ்மிகாவா இது…சினிமா வந்த உடன் ஆளே மாறிவிட்டாரே…!!

2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் ஹீரோயின் ஆக அறிமுகமானவர் தான் ராஷ்மிகா மந்தனா. ஆனால் இப்பொழுது தமிழ் மற்றும் தெலுங்கில் எக்ஸ்பிரசன் குயின் ஆக கலக்கி கொண்டு உள்ளார்.

பெங்களூரில் 1996 ல் பிறந்த ரஷ்மிகா தனது காலேஜ் படிப்பை முடித்து விட்டு மாடலிங் துறையில் நுழைந்தார். இதனை தொடர்ந்து சினிமாவில் நடிக்கவும் ஆர்வம் காட்டி ஆடிஷனில் கலந்துள்ளார். ரசிகர்களின் மத்தியில் கனவுக்கன்னியாக வாழும் ராஷ்மிகா மந்தனா கோபிலோல என்ற படத்திற்கு தான் முதலில் ஆடிஷன் சென்றுள்ளார். ஆனால் அந்த படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

பின் கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் கன்னடத்தில் நடித்தார். அதை தொடர்ந்து கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தெலுங்கிலும் சுல்தான் படத்தின் மூலம் தமிழிலும் அறிமுகமாகி கலக்கி கொண்டுள்ளார்.

இந்நிலையில் ரஷ்மிகா மந்தனாவின் முதல் ஆடிஷன் வீடியோ தற்பொழுது வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் அவர் சுடிதார் போட்டுவிட்டு ஆடி நடித்து காட்டியுள்ளார். அதில் அவரது குழந்தை தனமான அழகை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்

Exit mobile version