முன்பெல்லாம் வயது ஏற, ஏறத்தான் இரத்த அழுத்தப் பிரச்னை இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் இளவயதினர் கூட இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆரோக்கியமற்ற உணவு கலாச்சாரம், துரித உணவுகளின் மீதான நாட்டம், அளவுக்கு அதிகமான வேலைப்பளு என ஆயிரம் காரணங்கள் சொல்லப்படுகிறது.
பிளட் பிரஷர் எனச் சொல்லப்படும் இந்த இரத்த அழுத்தம் வந்துவிட்டால் வாழ்நாள் முழுவதும் மாத்திரை எடுத்துக் கொள்வது அவசியம் என்கிறது அலோபதி. ஆனால் சில குறிப்பிட்ட விசயங்களைப் பின்பற்றினால் இந்த இரத்த அழுத்த பிரச்னையை எதிர்கொண்டு வாழ்வில் வெற்றியும் பெற்றுவிடலாம்.
முந்தைய தலைமுறையினர் அதிக தூரம் தினசரி நடந்தே சென்றனர். ஆனால் இன்றோ வீட்டுப்பக்கத்தில் இருக்கும் பெட்டிக்கடைக்கே இளசுகள் பைக்கை முறுக்கிக் கொண்டு இருக்கின்றன. இது முதல் தவறு. தினசரி 30 நிமிடம் முதல் 45 நிமிடம் வரை நடைபயிற்சி செய்தாலே இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். இதேபோல் அளவுக்கு அதிகமான உடல் எடையும் ரத்த அழுத்தத்தை தாறுமாறாக ஏற்றிவிடும். அதனால் உடல் எடையில் கண் வையுங்கள். உடல் எடை குறையும்போது நம் இரத்த குழாய்கள் விரிவடையும். அதனால் இரத்த ஓட்டம் சீராகி இரத்த அழுத்தம் குறையும்.
காபியில் இருக்கும் காபின் என்னும் பொருளும் இரத்த அழுத்தத்தை கூட்டிவிடும். அதனால் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் காபி குடிப்பதை குறைப்பது நல்லது. புகை மற்றும் மதுப்பழக்கத்தை உடனே நிறுத்த வேண்டும். பெர்ரி பழம் அதிகம் சாப்பிடலாம். அதில் இருக்கும் பாலி பீனால்கள் நம் ஆரோக்கியத்தை மெயிண்டைன் செய்யும்
மெக்னீசியச் சத்துகள் நிறைந்துள்ள பச்சைக் காய்கறிகளை அதிக அளவில் சாப்பிட வேண்டும். அளவான சோடியத்தை பயன்படுத்துவதோடு, யோகா உள்ளிட்ட நல்ல விசயங்களில் எப்போதும் மனதைச் செலுத்தி உடலை சோர்வடையாமல் வைத்துக்கொள்ள வேண்டும் இதே போல் கால்சியம், பொட்டாசியம் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதன் மூலமும் இரத்த அழுத்தம் நம்மை நெருங்காமல் செய்து விடலாம். ஏற்கனவே இரத்த அழுத்தம் இருப்பவர்களும் இதை பாளோ செய்தால் கட்டுக்குள் கொண்டுவந்து விடலாம். . .
மற்றும் ஒரு முக்கிய மருத்துவ குறிப்பு உள்ளது. ஏலக்காய். இது அனைவரின் வீட்டிலும் இருக்கும் ஒன்று. உணவு உண்ட பின் இந்த ஏலக்காய் ஒன்றை வாயில் போட்டுக் கொள்ளுங்கள். எப்போதுமே உங்களுக்கு ப்ளட் பிரசர் அளவோடு இருக்கும் அதிகரிக்காது. முயற்சி செய்து பாருங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்..!