Site icon

தட புடலாக நடைபெற்ற இந்திரஜா ரோபோ சங்கர் சீமந்தம்…! தாத்தா வாகும் மகிழ்ச்சியில் ரோபோ சங்கர்…!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய அது இது எது என்ற நிகழ்ச்சியின் மூலமாக அறிமுகம் ஆனவர் தான் நடிகர் ரோபோ சங்கர். இவர் தன்னுடைய காமெடி திறமையினாலும் மக்களை மகிழ்வித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். இவருடைய திறமையினால் இவருக்கு முதலில் சின்னத்திரையில் நடித்தார். இவருடைய திறமைக்கும் உழைப்புக்கும் கிடைத்த பலன் தான் வெளித்திரை. வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் காமெடி நடிகராக நடித்துள்ளார்.

இவர் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர் என்று வலம் வருகிறார். இவருக்கு ரசிகர்கள் அதிகம். இவருடைய மகள் இந்திரஜா இவர் தளபதி விஜயின் பிகில் படத்தில் பாண்டியம்மா என்ற கதாபாத்திரத்தில் மிக அருமையாக நடித்திருப்பார். இவரும் தந்தையை போலவே காமெடி நடிப்பில் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். இந்நிலையில் இவருக்கும் இவருடைய தாய்மாமாக்கும் கடந்த ஆண்டில் திருமணம் நடைபெற்றது. திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இவர் கர்ப்பம் அடைந்தார். அதனை தொடர்ந்து அவருக்கு தற்போது வளைகாப்பு நடத்தபட்டது. இந்த வளைகாப்பு பெரும் விமர்சையாக நடைபெற்றது. குட்டி குழந்தை வர போகிற சந்தோஷத்தில் ரோபோ சங்கர் குடும்பம் ஆனந்தத்தில் மூழ்கி இருக்கிறது. இந்நிலையில் இவரின் வளைகாப்பு போட்டோசை இந்திரஜா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரல் ஆகி வருகிறது.

pic1

pic2

pic3

pic4

pic5

pic6

Exit mobile version