புரட்சி தலைவர் என்று அழைக்கப்படும் நடிகர் சத்யராஜ் தமிழ் திரையுலகில் நடிகர்கள் கமல், ரஜினி காலகட்டத்தில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டவர். இவர் தமிழ் சினிமாவிற்கு பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். மேலும் இவர் ஹீரோவாக மட்டும் இல்லாமல் வில்லனாகவும் குணசித்திர கதா பாத்திரமாகவும் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடித்துள்ளார். மேலும் இவர் நடித்த படங்களான வால்டர் வெற்றி வேல், அமைதி படை, அம்மாவாசை, சின்ன தம்பி பெரிய தம்பி, நண்பன் போன்ற குறிப்பிட்ட படங்கள் யாராலயும் மறக்க முடியாது.
இவர் நடிப்பில் வில்லாதி வீரன் ஆவார். மேலும் இவர் பாகுபலி படத்தின் மூலம் 2K கிட்ஸ்க்கு ஒரு கட்டப்பாவாக திகழ்ந்து வருகிறார். மேலும் இவர் இன்றளவும் தமிழ் சினிமாவில் தன்னுடைய நடிப்பினை சின்ன சின்ன கதாபாத்திரத்தில் வெளிக்கொண்டு வந்து இருக்கிறார். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இவரின் மகள் திவ்யா மகிழ்மதி ஊட்டச்சத்து நிபுணரான இயக்கம் மூலம் ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.
இன்று தன்னுடைய தந்தையான சத்யராஜின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய அப்பாவிற்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லியிருக்கிறார். மேலும் அவர் தன்னுடைய அப்பாவிற்கு பிறந்த நாள் பரிசாக விலையுயர்ந்த பொருட்கள் எது கொடுத்தலும் பிடிக்காது அதனால் என்ன கொடுக்கலாம் என யோசித்தேன். அப்போது தான் என்னுடைய அப்பா எனக்கு சிறு வயதில் சொல்லி தந்தது ஞாபகத்துக்கு வந்தது. சிறு வயதில் என்னுடைய அப்பா சொல்லுவார் நீ மேக்கப் போடுவதால் அழகாக முடியாது இந்த சமூகத்திற்கு நீ திருப்பி கொடுத்தால் தான் அழகாக முடியும் என கூறுவார்.
எனவே என்னுடைய சம்பாத்தியத்தில் இருந்து பாதியை முதியவர்களுக்கு செலவு செய்துள்ளேன் அவர்களிடம் இருந்து நானும் என்னுடைய அப்பாவும் ஆசி பெற்றோம் என கூறி உள்ளார். இதனை பார்த்த நெட்டிசென்கள் நடிப்பில் மட்டும் புரட்சி தலைவர் இல்லை ரியல் லைப்ல்லும் புரட்சி தலைவர் தான். அதனால் தான் பொண்ணுக்கு நல்ல விசியங்களை சொல்லி கொடுத்து வளர்த்திருக்கிறார் என வாழ்த்தி வருகின்றனர்.