Site icon

15 ஆண்டுகளாக வலிப்பு நோய்யால் அவதிப்பட்டு வந்த நபர்.. ஸ்கேனை பார்த்து அதிர்ந்து போன மருத்துவர்கள்..!

கடந்த 15 ஆண்டுகளாக சீனாவைச் சேர்ந்த ஒருவர் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்தார். அவரது தொடர் அவதியை பார்த்த மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

சீனாவை சேர்ந்த வாங் என்ற 36 வயது வாலிபருக்கு அடிக்கடி வலிப்பு நோய் ஏற்பட்டது. இதனால் அடிக்கடி வாந்தியும் இருந்து வந்திருக்கிறது. ஒருகட்டத்தில் அடிக்கடி இடதுகையும், காலும் மரத்துப் போய் இருக்கிறது. இதனால் வாங்கிற்கு எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியவில்லை. ஒருகட்டத்தில் அடிக்கடி மயங்கியும் விழுந்தவரை அவரது குடும்பத்தினர்கள் சிகிட்சைக்கு அழைத்துப் போனார்கள்.

பலகட்ட சோதனைக்கு பின்பு, ஒரு மருத்துவமனை அவரது மூளையை ஸ்கேன் செய்யும் யோசனையை முன்வைத்தது. அப்போது தான் அவரது மூளையில் ஒரு நாடாப்புழு உயிரோடு இருப்பது தெரிய வந்தது. அந்த புழுவானது, வாங்கின் மூளையை கொஞ்சம், கொஞ்சமாக சாப்பிடத் துவங்கியதால் தான் அவருக்கு வலிப்பு, மயக்கம் பிரச்னைகள் இருந்துள்ளது. அவருக்கு ஆப்ரேசன் செய்து, உயிரோடு இருந்த புழுவை அகற்றினர்.

ஐந்து இஞ்ச் நீளம் கொண்ட அந்த புழு, கடந்த 15 ஆண்டுகளாக வாங்கின் மூளையில் வாழ்ந்திருக்கிறது. நத்தைகளை தொடர்ந்து விரும்பி சாப்பிட்ட வாங்கிற்கு இந்நோய் அதனால் கூட ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேகித்தனர். பொதுவாக இந்த நாடாப்புழுக்கள் நாய், பூனையின் சிறுகுடலில் காணப்படும். அதேபோல் முறையாக வேகவைக்காத இறைச்சி மூலமும் இவை மனிதனுக்கு பரவும் வாய்ப்பு அதிகம் என மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Exit mobile version