இந்தியாவின் முதல் பிரதம மந்திரி ஜவர்களால் நேரு அவர்களின் பிறந்த நாளை நவம்பர் -14 குழந்தைகள் விழாவாக கொண்டாடுகிறோம். நாட்டில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் சம உரிமை, கல்வி, சுதந்திரம் போன்ற அனைத்து வித உரிமைகளும் நாட்டில் உள்ள குழந்தைகளுக்கு கிடைத்திட வேண்டும் என்ற நோக்கத்தோடு குழந்தைகள் தின விழா கொண்டாடப்படுகிறது.
இங்கிலாந்தில் ராணி எலிசபெத் பிறந்த நாள் அன்று ‘save the children’ என்ற தொண்டு நிறுவனம் குழந்தைகள் பாதுகாப்பிற்காகவும், அவர்களின் நலனிற்காகவும் நாடு முழுவதும் நிதி திரட்டி குழந்தைகள் பாதுகாப்பிற்கும், கல்விக்கும் இன்னும் சில நன்மை தரும் திட்டங்கள் இந்த அமைப்பின் மூலம் செய்துவருகின்றனர். ராணி எலிசபெத் அவர்களின் பிறந்த நாளை குழந்தைகள் தின விழாவாக கொண்டாடுகின்றனர்.
பள்ளிகளிலும் குழந்தைகள் தின விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி அவர்களுக்கு பரிசுகள் வழக்கப்படுகிறது. அன்றய தினம் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுவதோடு ஆசிரியர்களும் குழந்தைகளுக்கு பிடித்தமான பாடல்கள் பாடுவது, நடனம் ஆடி குழந்தைகளை மகிழ்விப்பார்கள். குழந்தைகளுக்கு பேனா, புத்தகம் போன்ற பரிசுகளை வழங்கி அவர்களை ஊக்குவிப்பார்கள். அன்றய தினம் குழந்தைகளிடம் கனிவாக நடந்து கொள்வார்கள். இங்கே காணொலியில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியர்கள் இளையதளபதின் பாடல்களுக்கு நடனம் ஆடி குழந்தைகளோடு குழந்தைகளாக மாறிய சம்பவம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதை இங்கே காணலாம்…..