Site icon

கூத்தாடி என்பது நல்ல வார்த்தை… நாங்கள் பெருமைப்படுவோம்.. ரச்சிதா மகாலக்ஷ்மியின் பதிவுகள்..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சரவணன் மீனாட்சி என்ற தொடரில் மீனாட்சி  என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலம் ஆனவர் தான் ரச்சிதா மகாலக்ஷ்மி . இவருக்கு என்று அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்த தொடர் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார். இந்த தொடரை தொடர்ந்து ரக்சிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார். இவர் முதலில் பிரிவோம் சிந்திப்போம் என்ற தொடரில் தான் நடித்தார். அதை தொடர்ந்து தான் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்தார்.

அவருக்கு சரவணன் மீனாட்சி தொடர் தான் பெயர் வாங்கி கொடுத்தது. அதை தொடர்ந்து நாம் இருவர் நமக்கிருவார் 2 வில் நடித்தார். பாதியில் விலகிவிட்டார். பிரிவோம் சிந்திப்போம் என்ற தொடரில்  அவருக்கு ஜோடியாக நடித்த தினேஷை காதலித்து திருமணம் செய்தார். 9 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் பிரிந்து விட்டனர். இவர் தற்போது சினிமாவில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார். தமிழ், கன்னடம் , மலையாள படங்களில் நடித்துவருகிறார்.

சமீபத்தில் வெளியான பயர் படத்தில் நடித்துள்ளார். மேலும்  அவர் வழங்கிய பேட்டி ஒன்றில் கூத்தாடி என்பதில் நாங்கள் பெருமை படுகிறோம். கூத்தாடி என்பது நல்ல  வார்த்தை. தேவையில்லாதவர்கள் தான் அதை தப்பாக ஆக்கினார்கள். நாங்கள் கூத்தாடியாகவே ஜெயிப்போம். நாங்கள் கூத்தாடியாகவே இருப்போம் என பேசியுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Exit mobile version