Site icon

இந்தியன் 3 ஓடிடி யில் வெளியாகலாம் சங்கரின் திடீர் முடிவு…!!

மிகவும் அசத்தலாக பெரிய செட் போட்டு படம் எடுப்பவர் என்றாலே அது டைரக்டர் சங்கர் தான். எந்த ஒரு படமாக இருந்தாலும் தனது திறமையை தனி சிறப்பு பெற காண்பித்து இருப்பார் டைரக்டர் சங்கர்.

இவர் எடுத்த எந்திரன் 2.0 பிரம்மாண்டத்தின் உச்சியை எட்டியது எனலாம். தற்போது உலக நாயகன் கமல்காசனை வைத்து இந்தியன் 2 எடுத்தார் சங்கர். சித்தார்த், பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால், ஜெகன் என பலர் நடிக்கும் இப்படம் 2 பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. முதல் பாகம் இந்தியன் 2 என்ற தலைப்பில் வெளியிட்டிருந்த நிலையில் எதிர்பார்த்த அளவு ஒன்றும் வெற்றியை தரவில்லை.

இதனை மனதில் வைத்து யோசித்த டைரக்டர் சங்கர் அவர்கள் இதன் இரண்டாவது பாகம் அதாவது இந்தியன் 3 யை நெட்பிளிக்ஸ் ஓடிடி யில் வெளியிடலாம் என படக்குழுவுடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளார் என்ற தகவல் கசிந்துள்ளது.
இருப்பினும் இன்னும் உறுதியான தகவல் வெளியாக வில்லை. இது குறித்து உறுதியான தகவல் வரும் என எதிர் பார்க்கப்படுகிறது.

Exit mobile version