புகை பிடித்தல் உடல் நலத்துக்கு தீங்கானது என்பது பொதுவாகவே அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் அதையெல்லாம் தாண்டி படித்தவர்கள் கூட புகைக்கு அடிமையாகி இருப்பது கொடுமையான விசயம் தான். இன்னும் சொல்லப்போனால் சிகரெட் அட்டையிலேயே புகையிலை புற்றுநோயை உருவாக்கும் என அச்சிடப்பட்டுள்ளது.
இதையெல்லாம் தாண்டி சினிமா தியேட்டருக்குப் போனால் அங்கு சிகரெட் தொடர்பாக ஒரு விளம்பரம் வரும். ஒரு பெண் குழந்தையின் முன்பு அதன் தந்தை சிகரெட் பிடிப்பார். குழந்தையின் முகத்தைப் பார்த்துவிட்டு சிகரெட்டை தூக்கி எறிவார். 2008ம் ஆண்டில் மத்திய அரசின் செய்தி ஒளிபரப்புத்துறையால் எடுக்கப்பட்ட இந்த விளம்பரம் தான் இன்றும் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த விளம்பரத்தில் நடித்திருக்கும் குழந்தையின் பெயர் சிம்ரன் நடேகர். விளம்பரம் சூட் செய்யப்பட்ட போது ஏழு வயதே ஆன இந்த குழந்தைக்கு இப்போது 19 வயது. படிப்பில் முழு கவனம் செலுத்திவரும் இந்த பெண், இப்போது மாடலிங் துறையிலும் அசத்திவருகிறார். சில பாலிவுட் படங்களிலும் அம்மணி நடித்துள்ளார். அம்மணி சீக்கிரமே ஹீரோயினாக அறிமுகம் ஆக உள்ளார்.
pic1
pic2
pic3