தமிழ்த்திரையுலகில் நடிகர்கள் நீண்டகாலத்துக்கு தாக்குப்பிடிக்கிறார்கள். ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார் ஆகியோர் 35 வருடங்களுக்கும் மேலாலாக திரையுலகில் தாக்குப்பிடிக்கின்றனர். ஆனால் நாயகிகளைப் பொறுத்தவரை திரையுலகில் அத்தனை காலம் தாக்குப்பிடிப்பதில்லை.
அப்படித்தான் குறுகிய கால அளவில் நடிப்பில் உச்சத்தில் இருந்தார் நடிகை சிந்து துலானி. தனுஷ் நடித்த ‘சுள்ளான்’ திரைப்படம் மூலம் தமிழ்த்திரையுலகுக்கு அறிமுகமான சிந்து துலானி, அந்தப்படத்தின் வெற்றியால் வெகுவாகப் பேசப்பட்டார். தொடர்ந்து நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக இவர்நடித்த ‘மன் மதன்’ திரைப்படம் பட்டி,தொட்டியெங்கும் ஹிட் அடித்தது. இந்தப்படம் பெரும் வெற்றிபெற்றாலும் சிந்து துலானிக்கு தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லை
இதன் காரணமாகத் தெலுங்கு திரையுலகம் பக்கம் ஒதுங்கினார் சிந்து துலானி. அங்கு அவர்நடித்த படங்களும் ஹிட் அடித்தது.. தமிழில் விக்ரம் நடித்த ‘மஜா’ படத்திலும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டார் சிந்து துலானி. தெலுங்கில் ‘சித்ரகதா’ படத்தில் நடித்த சிந்து துலானியை அதன் பின்னர் திரையில் பார்க்கவே முடியவில்லை. நண்பர் ஒருவரை திருமணம் செய்துவிட்டு செட்டிலாகிவிட்டார்.
இந்நிலையில் தன் கணவர், குழந்தையோடு இருக்கும் புகைப்படத்தை சிந்து துலானி வெளியிட்டு இருக்கிறார். அதைப் பார்ப்பவர்கள் அடடே சிந்து துலானியா இது? என ஆச்சர்யத்தில் மூழ்கிப் போயுள்ளனர்.