தமிழரின் மரபுகளில் பழமை வாய்ந்த கலைகளை இன்றும் நாம் பின்பற்றி வருகிறோம். அதற்கு காரணம் நம் வாழ்வில் இணைந்த பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் மற்றும் கலாச்சாரம். அதிலும் முக்கியமாக திருவிழாக்கள், பண்டிகைகள் காரணமாயிருக்கின்றன.
கோவில்களில் வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ திருவிழாக்கள் நடைபெறும். அப்போது தவில், நாதஸ்வரம், வில்லுப்பாட்டு போன்ற கிராமிய கலைகள் நடைபெறும். அதனை மக்கள் மிகவும் ரசிப்பார்கள். பெரும்பாலும் இவ்வகையான திருவிழாக்கள் கிராமங்களில் நடைபெறுவது அதிகம்.
திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகளில் தவில் மற்றும் நாதஸ்வரம் கொண்டு மங்கள இசை வாசிக்கப்படும். இந்த இசையானது நேர்மறை எண்ணங்களை உருவாக்கும் என்று நம்பப்படுகிறது. இது பெரும்பாலும் நாதஸ்வர ஒலியுடன் ஒருங்கே இசைக்கப்படும். போட்டி போட்டு கொண்டு நாதஸ்வர வித்துவான்களும், தவில் வாசிப்போரும் இணைந்து வாசிக்கும் போது கேட்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும். மேலும் தவிலானது பலா மர கட்டையால் உருவாக்கப்படுகிறது. இது கர்நாடகா இசையின் அங்கமாகவும் விளங்குகிறது. இந்த இசையின் பரிணாம வடிவம் தஞ்சாவூர் இருந்து பிறந்ததாக கூறப்படுகிறது. தஞ்சாவூரின் வளையாபட்டி தவில் அதிகமாக பிரபலம் அடைந்துள்ளது.
கலைகளில் சிறந்து விளங்கும் நிபுணர்கள் தங்கள் குழந்தைகளுக்கும் கற்று கொடுக்கின்றனர். அடுத்த தலைமுறைக்கு கலையை கற்று கொடுப்பதன் மூலம் நம் தமிழரின் பாரம்பரிய கலைகள் என்றும் நம் வாழ்வில் இணைத்திருக்கும்.
இங்கே ஒரு குட்டி வித்துவான் தவில் உயரம் கூட இல்லாத சிறுவன் தவிலை கழுத்தில் மாட்டி கொண்டு உச்சி வெய்யிலையும் கண்டுகொள்ளாமல், அதன் எடையையும் தூக்கி கொண்டு அபாரமாக தவில் வாசித்தது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. அதனை இங்கே காணலாம்