தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவருடைய திறமையால் தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இவருடைய உழைப்புக்கு கிடைத்த பரிசு தான் சினிமா என கூட சொல்லலாம். தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி இணைந்து நடித்த படம் தான் அமரன்.
இந்த படம் தீபாவளி அன்று வெளிவந்தது. ஒரு ராணுவ வீரரின் உண்மை கதையை கொண்டுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் ப்ரோமோஷனில் சிவகார்த்திகேயன் பேசிய தகவல் ஓன்று தற்போது வைரல் ஆகி வருகிறது. அதாவது நான் முன்பு இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வேட்டை மன்னன் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினேன்.
சினிமாவில் நடிப்பதை காட்டிலும் இயக்கம் மிகவும் கடினம் எனவும் மேலும் இயக்குனராக இருப்பதற்கு பொறுமை மிகவும் முக்கியம் எனவும் என்னால் அது முடியாது எனவும் கூறியுள்ளார். மேலும் அது போல தான் ஸ்கிரிப்ட் எழுதுறதும் மிகவும் கடினமான விஷயம் எனவும் சிவகார்த்திகேயன் பேசியுள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.