தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவருடைய திறமையால் தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இவருடைய உழைப்புக்கு கிடைத்த பரிசு தான் சினிமா என கூட சொல்லலாம். தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி இணைந்து நடித்த படம் தான் அமரன்.இந்த படம் தீபாவளி அன்று வெளிவந்தது. ஒரு ராணுவ வீரரின் உண்மை கதையை கொண்டுள்ள இந்த படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படம் இன்று வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது. மேலும் இந்த படம் வசூலிலும் சாதனை படைத்துள்ளது. இந்த படம் சிவகார்த்திகேயன் ஹரியரில் முக்கிய படம் என்றே சொல்லலாம். மேலும் இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் SK 23 படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவருடைய அக்காவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அதில் அன்பு அக்கா ஹாப்பி பர்த்டே என்றும் குழந்தை பிறந்த பிறகு எம்பிபிஎஸ் படிப்பதை ஆரம்பித்து 38 வயதில் கோல்ட் மெடலுடன் எம்டி பட்டம் பெற்றாய்.
இப்போது 42 வயதில் எஃப்ஆர்சிபி முடித்த உன்னை நினைத்து அப்பா மிகவும் பெருமை படுவார். எனவும் மேலும் உனக்கு துணை நிற்கும் அத்தான்க்கும் நன்றி என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் அக்காவுக்கு பிறந்த நாள் பரிசாக மினி கூப்பர் காரை வழங்கியுள்ளார். இதனை அவரது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அவரது அக்காவிற்கு பிறந்த நாள் வாழ்த்தை கூறி வருகிறார்கள்.