தூக்கத்தை பிடிக்காதவர்கள் யாருமே இருக்கமாட்டார்கள். அதிலும் சிலர் தூங்கும்போது போர்வையால் தலைமுதல் கால் வரை இழுத்து மூடிவிடுவார்கள். ஆனால் அது முற்றிலும் தவறானது. நீங்கள் மறந்தும்கூட உங்கள் கால்வரை பெட்சீட் போட்டு மூடிவிடாதீர்கள். அதற்கான காரணம் என்ன எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
பொதுவாகவே உடலுக்கு குளுமை கிடைக்கும்போதுதான் நல்ல தூக்கம்வரும். அதிலும் காலின் பாதங்களில் முடிகள் இல்லாததால் பாதத்தின் சருமம் மிக,மிக மென்மையானது. இதனாலேயே நம் உடலில் எளிதில் குளுமையடையும் இடமாகவும் இது இருக்கிறது. இதனால் நாம் படுக்கும்போது கால்களை போர்வைக்கு வெளியில்தான் வைக்கவேண்டும். இப்படி வைத்தால் தூக்கம் சீக்கிரம் வந்துவிடும். இதேபோல் நம் பாதத்தின் சருமமானது வாஸ்குலர் கட்டமைப்பு கொண்டுள்ளதால் உடல் சூட்டை வேகமாகக் குறைக்கும்.
நமக்கு காய்ச்சல் காலங்களில் உடல்சூடு அதிகரிப்பதால்தான் சரியாக தூக்கம் வருவதில்லை. பொதுவாகவே இதெல்லாம் குறித்து நியூயார்க் பல்கலைக்கழகம் ஒரு ஆய்வு செய்தது. அதன் முடிவுகளில் என்ன வந்தது தெரியுமா? பொதுவாகவே கால்களை போர்வைக்கு வெளியே இருக்கும்படி வைத்தால் ஆழமான தூக்கம் சீக்கிரம் வரும். இதேபோல் இரவு குளித்துவிட்டு தூங்கினாலும் உடல் குளுமை அடைவதால் நல்ல தூக்கம் வரும்.
தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் கால்களை மூடாமல் படுத்துப்பாருங்கள். உங்கள் உடலுக்கு குளிர்ச்சி கிடைத்து நன்கு தூக்கம்வரும்.