இசை, கலைக்கு மயங்காதவர் யாருமே இல்லை. இசையும், கலையும் இனம், மதம், மொழி என அத்தனையையும் கடந்தது. அந்த இசை என்னும் இன்ப வெள்ளத்தில் நீந்திப் பருகாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். இவ்வளவு ஏன்? பாம்பைப் பார்த்தால் படையே நடுங்கும் என்பார்கள். ஆனால் அந்த பாம்பு கூட மகுடி இசைக்கு மயங்குவதை நாம் பார்த்திருப்போம்.
பாம்பு எப்போதும் நம்மை அச்சமூட்டக் கூடியது. பாம்பைப் பார்த்தால் படையும் நடுங்கும் என பழமொழியே சொல்லும் அளவுக்கு பாம்பு பயங்கரமானது. ஆனால் நம் தமிழர்களின் மரபில் பாம்பு, தெய்வமாகவும் பார்க்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் நாகராஜா கோவிலில் பாம்பு வழிபாடே பிரதானம். பாம்புகளுக்கு என்றே இங்கே பிரத்யேக ஆலயம் எழுப்பப்பட்டு உள்ளது.
பாம்புகள் நாமாக அவைகளை தொந்தரவு செய்யாத வரை அவை நம்மை தொந்தரவு செய்வதில்லை. ஆனால் பாம்பைப் பார்த்ததும் நம்மையும் அறியாமல் மிகவும் பயந்து போய்விடுகிறோம். இன்னும் சிலரோ பாம்பை மிகவும் அசால்டாக டீல் செய்வார்கள். இங்கேயும் அப்படித்தான் ஒருவர் அசால்டாக டீல் செய்யும் காட்சிகள் இணையத்தில் செம வைரல் ஆகிவருகிறது. அப்படி அவர் என்ன செய்தார் எனக் கேட்கிறீர்களா?
தங்கள் வீட்டிலேயே மூன்று பாம்புகளை வளர்க்கிறது இந்தக் குடும்பம். அதுவும் சின்ன ரக மலைபாம்பும் அதில் இருக்கிறது. வீட்டில் கொடியில் துணி காயப்போடுவது போல் கயிறுகட்டி பாம்பை அந்தரத்தில் தொங்கவிட்டிருக்கிறார்கள். அதிலும் அந்த வீட்டில் இருப்போர் துளிகூட பயம் இல்லாமல் அதனோடு சேர்ந்தே வாழ்கிறார்கள். இதைப் பார்த்த நம் இணையவாசிகள் அடேங்கப்பா…இப்படி இருந்த சொந்தக்கார்ர்கள் எப்படி வீட்டுக்கு வருவார்கள்? என கமெண்ட் செய்துவருகின்றனர்.