Site icon

மேக்கப் இல்லாமலே சினேகா எவ்வளவு அழகு பாருங்க… குழந்தைகளுடன் விளையாடும் அழகிய புகைப்படங்கள்..!

புன்னகை அரசி சினேகா தமிழ்த்திரையுலகில் உச்சத்தில் இருந்த போதே, நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் படத்தில் கவனம் செலுத்தவில்லை. கணவர், குழந்தை என தன் வாழ்வின் பெரும்பகுதியை குடும்பத்துக்காகவே ஒதுக்கினார்.

கடந்த 2000வது ஆண்டில் வெளியான மாதவன் நடித்த ‘என்னவளே’ படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகுக்கு அறிமுகமான சினேகா, தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்தார். இளைய தளபதி விஜயோடு வசீகரா, தல அஜித்தோடு ஜனா, கமலஹாசனோடு வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் என பல முண்ணனி நடிகர்களோடு நடித்தவர் திரையுலகில் உச்சத்தில் இருந்த போதே கடந்த 2012ல் நடிகர், பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்தார்.

இந்த தம்பதிக்கு கடந்த 2015ல் விகான் என்ற ஆண் குழந்தை பிறந்தது. இப்போது இரண்டாவதாக கருவுற்று இருக்கிறார். அதன் வளைகாப்பு நிகழ்வில் எடுத்த படங்களை சினேகா குடும்பத்தினர் சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு இருந்தனர். இந்நிலையில் நடிகை எவ்வித மேக்கப்பும் இல்லாமல் அக்மார்க் குடும்பத் தலைவியாக தன் மகனுடனும், வீட்டு நாய் பக்கத்தில் இருக்க விளையாடிக் கொண்டிருக்கும் படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

pic1

pic2

pic3

Exit mobile version