நடிகர் வடிவேலுக்கு திரையுலகில் திருப்புமுனை ஏற்படுத்திய கதாபாத்திரம் என்றால் அது சூனா…..பானா……காமெடி கதாபாத்திரம், அது வெறும் கற்பனை கதாபாத்திரம் அல்ல நிஜ கதாபாத்திரம். திருநெல்வேலி மாவட்டம், தென்காசி பகுதியை சேர்ந்த நபரின் பெயர் தான் சுப்பையா பாண்டியன். அந்த பகுதியில் இவர் மிகவும் பிரபலம். இவரின் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகளை ஒருங்கிணைத்து அந்த காமெடி காட்சிகளை தொகுத்து வழங்கி இருப்பார் இயக்குனர்.
சூனா…பானா…காமெடி காட்சிகள் இடம் பெற்ற திரைப்படம் கண்ணாத்தாள்,இது 1998-ம் ஆண்டு வெளிவந்து ஹிட் ஆகியது. இந்த திரைப்படத்தை இயக்கியவர் பாரதி கண்ணன். இவருடைய மாமா தான் சூனா… பானா….கதாபாத்திரத்திற்கு சொந்தக்காரானா சுப்பையா பாண்டியன்.
நடிகர் வடிவேலு அவர்களின் இந்த சூனா…பானா….காமெடி இன்றும் மக்கள் மனதினில் நிலைத்து நிற்கிறது. அதற்கு முக்கிய காரணம் இயக்குனர் அவர்கள். அந்த கதாபாத்திரத்தை ரசித்து அவரின் குண நலன்களை படத்தில் காமெடியாக காட்டியிருப்பார். இவர் மேலும் பண்ணாரி அம்மன், கரகாட்டக்காரி போன்ற பக்தி படங்களை இயக்கியதோடு நடிகர் பிரபு நடித்த திருநெல்வேலி படமும் இவரின் இயக்கத்தில் வெளி வந்தது. இந்த படத்தில் இடம் பெற்ற நடிகர் விவேகின் காமெடி காட்சிகள் அவருக்கு சின்ன கலைவாணர் என்ற பெயரை பெற்று தந்தது.
இயக்குனர் பாரதி கண்ணன் அவர்கள் படங்கள் இயக்குவதோடு நகைசுவை காட்சிகளில் நடித்து புகழ் பெற்றுள்ளார். மேலும் இவர் கோலங்கள், மாதவி, ராஜகுமாரி, மடிப்பாக்கம் மாதவன், பாசமலர் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். தற்போது எதிர் நீச்சல், பாண்டவர் இல்லம், பொறந்த வீடா புகுந்த வீடா போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முக்கிய பங்காற்றி வருகிறார் என்பது குறிப்பிட தக்கது. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் சூனா ….பானா காமெடி காட்சிகள் கற்பனை கதாபாத்திரம் இல்லை நிஜ கதாபாத்திரம் என்று அந்த படத்தினை உருவாக்கிய விதத்தை பேட்டிகளில் விவரித்து வருகிறார். அந்த காணொலியை இங்கே காணலாம்