குழந்தைகள் பல வித திறமையோடு இருப்பார்கள். அதனை இயல்பாகவே வெளிப்படுத்தும் போது நாம் காணலாம். ஒரு சில பெற்றோர்கள் குழந்தைகளின் விருப்பம், ஆர்வம், ஈடுபாடு இவற்றை அறிந்து பயிற்சி அளித்து ஊக்குவிப்பதால்அந்த குழந்தைகள் எதிர்காலத்தில் திறமைசாலிகளாக வருகிறார்கள்.
ஒவ்வொரு மனிதற்குள்ளும் ஒருதிறமை இருக்கும், அதனை சிறு வயதில் இருந்தே அவர்களது திறமையினை பாராட்டி ஊக்குவித்திருந்தால், அனைவரும் ஏதேனும் துறையில் சிறந்து விளங்கியிருப்பார்கள்.
ஸ்பைடர் மேன் சிறுவன் ஒருவன் கால் மற்றும் கைகளால் எந்த வித உபகாரணத்தையும் பயன்படுத்தாமல் சர்வ சாதாரணமாக சுவற்றில் ஏறுக்கிறார். ஏறுவதோடு சுவற்றில் பல்லி போல் கால்களால் நிற்கிறார். இதனை எப்படி ஒரு சிறுவனால் செய்ய முடிகிறது என்று இணையவாசிகள் ஆச்சரியத்தில் பார்க்கின்றனர்.
இந்த சிறுவன் என்னடா நம்ம ஸ்பைடர் மேன் ‘டோபி மாஃவ்யர்’க்கு சவால் விடுவான் போலிருக்கே, மேலும் ஸ்பைடர் மேன் படம் 2002-ல் வெளியாகி 20 வருடங்கள் கடந்த நிலையில் மீண்டும் நிஜ ஸ்பைடர் மேனாக இந்த சிறுவன் அசத்திவருகிறார் என்றும் வலைதளவாசிகள் கருத்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். சிலந்தி மனிதனுக்கே கற்று கொடுக்கும் நம்மூர் ஸ்பைடர் போல் சுவற்றில் ஏறும் சிறுவனின் அசாத்திய திறமையை பலரும் பாராட்டி வருகின்றனர்