வலம்புரி சங்கு கோவில்களிலும் ,வீடுகளில் பூஜை அறையிலும் பூஜிக்கப்படும் மங்கள பொருளாக பார்க்கப்டுகிறது. அதனால் வலம்புரி சங்கிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. மிக எளிதில் கிடைக்க பெறாத காரணத்தால் வலம்புரி சங்கு விலையும் அதிகமாக இருக்கிறது. வலம்புரி சங்குகள் தக்ஷிணவர்த்தி என்றும், ஸ்ரீ லட்சுமி சங்கு என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்தியாவில் சங்குகளை புனித தன்மை வாய்ந்ததாக மக்களால் கருதப்படுகிறது.
வலம்புரி சங்குகள் இந்திய பெருங்கடல் பகுதியிலும்,மியான்மர் மற்றும் இலங்கையில் மட்டுமே காணப்படுகிறது.இந்திய பெருங்கடலில் அதிகமாக ராமேஸ்வரம், தூத்துக்குடி மற்றும் அரபி கடல் முதல் வங்காள விரிகுடா வரை சங்குகள் வெவ்வேறு வடிவங்களில் கிடைக்கப் பெறுகிறது.
ஒரு லட்சம் சங்குகளில் ஒரு சங்கு மட்டுமே வலம்புரி சங்காக உருமாறும். இந்த சங்கின் வலது புறம் ஐந்து அடுக்குகளை கொண்ட மடிப்புடன் காணப்படும். இதை .பஞ்சஜன்யா’என்றும் வகைப்படுத்தபடுகிறது. பெரும்பாலான சங்குகள் ஆரஞ் நிறத்தில் காணப்படும். பால் வெண்மை நிறத்தில் காணப்படும் சங்குகள் அரிதானவை மேலும் விலையும் அதிகம். மூன்று அடிக்கு மேலாகவும் பத்து கிலோவிற்கும் அதிகமாக வலம்புரி சங்குகள் மிக அரிதாகவே கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த வலம்புரி சிங்கு நேர்மறை ஆற்றலை பெருக்கும், வீட்டில் வைத்து பூஜை செய்தால் செல்வ செழிப்பும், நல் வாழ்க்கையும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
இங்கே ஒருவர் மீனவர் கைகளில் வைத்திருக்கும் சங்கின் அற்புதத்தை மிக அழகாக எடுத்துரைக்கிறார். இந்த சங்கின் வாய் பகுதி பெருமாளின் கால் பாதம் என்றும், பின் பக்கம் சக்கரம், சூரியன், ஆணை முக விநாயகர், கோ மாதா மடி என்று பெருமாளின் அம்சங்கள் பொருத்திய சங்கின் அற்புதத்தை விளக்கிவிட்டு காது கொடுத்து சங்கின் ஒலியை கேளுங்கள் என்று கூறுகிறார். சங்கின் அற்புதத்தை பார்த்த வலை தளவாசிகள் ஆச்சர்யத்தோடு கண்டு களிக்கின்றனர். அந்த காணொலியை இங்கே காணலாம்……