சிலரை பார்த்திருப்போம் வயிறே தெரியாது. அதே அவர்கள் எதையாவது சாப்பிட்ட பின் பார்த்தால் வயிறு புஸ் என பலூன் போல் ஊதிவிடும். இதற்கு வயிற்றுப்பகுதியில் இருக்கும் அமிலம் உணவுக்குழாய் வழியாக உயர்வதுதான் காரணம்.
பொதுவாக இந்த பிரச்னை இருப்பவர்கள் ஆரஞ்சு, ஆரஞ்சு ஜூஸ், எலுமிச்சை, திராட்சை, மிளகாய்ப்பொடி, கடுகு போன்றவற்றை தவிர்த்தல் நல்லது காரமான உணவுகள் எரிச்சலை ஏற்படுத்தி செரிமானத்தில் கோளாறு ஏற்படுத்தும்.
இதனால் எதுகளித்தலும் அட்பிக்கடி நிகழும். இதேபோல் தக்காளியை பிரதானமாக பயன்படுத்தி செய்யப்படும் பாஸ்தா, தக்காளி சூப், ஜூஸ் ஆகியவற்றாலும் இந்த நிலை ஏற்படும்.
சாலமி, பர்கர், பீட்சா, ஸ்டீக்ஸ் போன்ற கொழுப்பு உணவுகளை தவிர்த்தலும் நல்லது. இவை உணவை சீரணிக்க விடாது. இதேபோல் இரவு படுக்கைக்கு முன்னர் பால் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும். இதனாலும் எதுக்களித்தலை தவிர்க்கலாம்.